பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் - 173

எண்ணிக்கையில், நான்கு பாராதைராய்டு சுரப்பிகள் இருக்கின்ற அவை, பக்கத்திற்கு இரண்டாக அதாவது இரண்டு மேலாகவும், இரண்டு கீழாகவும் அமைந்துள்ளன.

ஒவ்வொரு சுரப்பியின் எடை 0.05 கிராமாக இருக்கிறது.

பாராதைராய்டு சுரப்பி சுரக்கின்ற ஹார்மோனுக்குப் Guu urrungsri#Glomgr (Parathoromone);

இது, உடலில் உள்ள கால்சியம் (Calcium) மற்றும் பாஸ்பரஸ் (Phosperous) போன்றவற்றைக்கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

பாராதைராய்டு சுரப்பி அதிகமாக பாராதார்மோனை சுரந்து விட்டால், இரத்தத்தில் கால்சியத்தின் அளவு கூடிப் போகிறது. இதனால் மூத்திரப் பிரிவுகளில், கால்சியம் அதிகமாகப் படிந்து போய், மூத்திரக் கற்கள் என்பதாக உண்டாகி விடுகின்றன.

அத்துடன், எலும்புகளில் உள்ள கால்சியச் சத்து, அதிகமாக எடுக்கப்பட்டு விடுவதால், ஆஸி டிரிட்டில colul 9Ggiram staml fisir(Osteritids Fibirosa Cystrica) grerp நோய் எற்படுகிறது.

கால்சியக் குறைவால், வாலிபர்களுக்குப் பல் வியாதியும் ஏற்படக் காரணமாகின்றது. அதாவது, பாராதார்மோனின் விளைவு, வைட்டமின் D யைப் பாதிப்பதாகவும் அமைந்திருப்பதை அறிய முடிகிறது.

பாராதார்மோன் சுரப்பு குறைந்து போய் விட்டால் இரத்தத்தில் கால்சியம் குறைகிறது. அதனால் வலிப்பு நோய் வருகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.