பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 177

ஏற்படுவதை, உணர்ச்சி வசப்படும் அனைவரும் உணர்வதை, நீங்களும் அறிந்திருக்கலாம்.

இதற்கும் மேலாக, இந்த ஹார்மோன் செய்யும் உதவிகள் L/ Gl). - -

இது இரத்தக்குழாய்களுக்கு உணர்ச்சியூட்டி, அவற்றின் அழுத்தத்தை, சீராக்கி உதவுகிறது.

இது மாவுப் பொருட்களில் உண்டாகும் மாற்றங்களைக் கட்டுப் படுத்துகிறது.

இது கல்லீரலில் கிளைகோஜனை குளுகோசாக மாற்றி, இரத்தத்திற்கு விநியோகம் செய்கிறது.

மேற்கூறிய மாற்றங்கள் யாவும், மனிதர்களுக்கு ஏற்படுகிற அவசர காலங்களில், முக்கியமாகத் தேவைப் படுகின்றன. 6. பால் இனச் சுரப்பி

பால் இன ஹார்மோன்களைச் சுரக்கின்ற சுரப்பிகளாக விரைகளும், சூலகங்களும் விளங்குகின்றன.

இச்சுரப்பிகள் பால் இன ஹார்மோன்களைச் சுரந்து, இரத்தத்தில் கலக்கச் செய்கின்றன.

இந்த ஹார்மோன்கள் இரண்டு தரமான காரியங்களைச் செய்கின்றன. - -

முதல் தர பாலினப் பண்பு, இரண்டாந்தர பாலினப் பண்பு என்பதாக, அப்பணிகள் வேறுபடுகின்றன.

முதல்தர பாலினப் பண்பில், பால் இனஉறுப்புக்களும், ஆண் மற்றும் பெண்களில் கலவி உறுப்புக்களும் அடங்கும். இரண்டாந்தரப் பண்பில், ஆணிலிருந்து பெண்ணையோ அல்லது பெண்ணிலிருந்து ஆணையோ பிரித்தறியக் கூடிய அமைப்புக்கள் அடங்கும்.