பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 179

நிகழாது. மேற் கூறிய குணங்கள் இல்லாது போனால், அவர்களை அலிகள்(Eumech) என்று அழைக்கப்படுவார்கள். பெண் பால் ஹார்மோன்

சூலகத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன்களில் ஒளிப்ட் ரோஜென்ஸ் முக்கியமானதாகும். சூலகங்கள் (Ovaries) இரண்டும், வயிற்றின் அடிப்பாகத்தில், கர்ப்பப்பையின் இருபக்கங்களிலும் அமைந்திருக்கின்றன.

பெண்களுக்கு 12 அல்லது 13 வயது ஆகும்போது இந்தச் சுரப்பிகள் பூரண வளர்ச்சியைப் பெறுகின்றன.

இதன் அறிகுறிதான் பெண்களுக்கு மாதவிடாப் ஏற்படுவதாகும். (Menstruation)

இந்த ஹார்மோனின் பணிகள் பின்வருமாறு:

1. பெண்களின் பருவ முதிர்ச்சியைக் காட்டுகிறது.

2. மார்பகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

3. மாதவிடாயைக் கட்டுப்படுத்துகிறது. மூன்றாவதாக உள்ள ஹார்மோன், புரோஜெஸ்டிரா ஜென்ஸ் ஆகும். s

இது, கர்ப்பத்தின் சகஜமான பணிக்கு உதவுகிறது. இந்த ஹார்மோனை, கர்ப்பத்தின் ஹார்மோன் என்றும் அழைக்கின்றனர்.

பெண்பால் ஹார்மோன்கள், ஆண்பால் ஹார்மோன் களைப் போல, செல்களின் வளர்சிதை மாற்றத்திலும் முக்கிய பங்கேற்கின்றன.

பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படுகிறது. பெண்களுக்கு 40 முதல் 50 வயதாகும் போது, இந்த ஹார்மோன்கள்சுரப்பது, படிப்படியாகக் குறைந்து போகிறது.