பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 187

நமது தேகத்தின் சாளரங்களாக விளங்கும் கண், காது, மூக்கு, வாய், தோல் போன்றவை முக்கியமான உறுப்புக் களாக விளங்குகின்ற்ன. அவற்றை பஞ்சேந்திரியங்கள் என்று பெருமையாகக் கூறுவார்கள்.

இத்தகைய ஐம்பொறிகளும், வெளி உலகில் நிகழ்வன வற்றை நமக்கு விவரமாகக் கூறுவதாகவும், காட்டுவதாக வும், உணர்வதாகவும் செயல்படுகின்றன. இவைகளின் இதமான பணிகளுக்கு ஆதாரமாக அமைந்திருப்பவை நரம்புகள் தாம்.

இந்த நரம்புகள் ஐம் பொறிகளுடன் மட்டுமின்றி, உடலில் உள்ள எல்லா உறுப்புகளுடனும் இணைக்கப்பட் டிருக்கின்றன. அத்துடன் இவை, மூளை என்னும் முக்கிய கேந்திரத்துடனும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் செயலே, எடுப்பான செயலாக நம் தேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரச்சினைகள் பெருகிடும் உலகத்தில், சிக்கலாக அமைந்துள்ள தேகத்தில், சீரான சூழ்நிலைகளை உருவாக்கவும், நேராகக் காரியங்கள் நடைபெறவும், நரம்பு மண்டலம் பெரும்,பங்கு வகிக்கிறது.

நரம்பு மண்டலம் என்பது, மூளை, தண்டுவடம், நரம்புகள் கொண்டவையாகும்.

நரம் பு மண்டலம் இரண்டு பெரும் பிரிவாகப் பிரிந்திருக்கிறது.

1. Loggu 5 rub y lo Girl col (Central Nervous system)

2. Gausstlip Egub logirl_avib (Peripheral Nera vous system) -