பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 17

இதனுள், மைட்டோ கான்ரியா, கோல்கி ஆபரேட்டஸ் சென்ட்ரோசோம், காற்றுக் குமிழிகள் என்ற பிரிவுகள் அடங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையை, மிகச் சிறப்பாக ஆற்றிக் கொண்டிருக்கின்றன.

1. G&mdio -ou Girl enj (Golgi Apparatus)

இது உட் கருவின் பக்கத்தில், ஒரு பூ போன்ற அமைப்பில் அமைந்திருக்கிறது. இதன் முக்கிய பணியானது, செல்லுக்கு வேண்டிய நீரைச் சுரந்து தருவதாகும். 2. color: Gl-marcirfur (Mitochondria)

சிறு சிறு குச்சிகள் போன்ற வடிவத்தில், உட்கருவைச் சுற்றி, ஆங்காங்கே காணப்படுபவை இவை. இவைகள் செல் சுவாசிப்பதற்கு நன்கு உதவுகின்றன. 3. சென்ட்ரோசோம் (Centrosome)

உட்கருவின் பக்கத்தில் உள்ள சைட்டோ பிளாசத்தில் அடர்த்தியான ஒரு சிறிய பாகம் இருக்கிறது. அதையே சென்ட்ரோசோம் என்று அழைக்கின்றார்கள்.

இந்த சென்ட்ரோசோமின் நடுவில் இரண்டு கண்கள் போன்று, இரு பொதுப் பகுதி (Central Body) அமைந்திருக் கின்றது.

இது செல்லானது இன விருத்திக்காக இரண்டாகப் பிரிகிறபோது, குரோமோசோம்களைப் பிரிப்பதற்கு ஏற்ற கதிர்களை உண்டாக்கித் தருகிறது.

1. காற்றுக்குமிழிகள் (Vacuole)

காற்றுக் குமிழிகள், ஆங்காங்கே சைட்டோபிளாசததில்

அமைந்திருக்கின்றன. செல்லுக்குள்ளே காற்று இருந்து கொண்டு, செல்லின் உருவமும் வடிவமும் நிலையாக