பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 189

என்பர். அவற்றை வெளிச் செல்லும் நரம்புகள் என்றும்

கூறலாம். -

முக்கியமான முதன்மைப் பொருளாக விளங்குகிற

மூளையைப் பற்றி இனி தெரிந்து கொள்வோம்.

/. &pgoom (Brain)

தேகத்தின் முக்கியமான உறுப்பாகவும், நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பாகவும் மூளை திகழ்கிறது.

மனிதரது தேகத்தில், நல்ல வளர்ச்சியடைந்திருக்கிற நரம்பு மண்டலத்தின் மூளை தான், அவரது சிந்தனைக்கான உறுப்பாக அமைந்திருக்கிறது. -

முதலில் உழைப்பு, அதன் பிறகு, உழைப்போடு சேர்ந்த பேச்சு. இந்த இரண்டு தூண்டல்களும் சேர்ந்துதான், மனிதக் குரங்கின் மூளையை வளர்த்து விட்டன. இந்த மூளையின் எழுச்சியான வளர்ச்சியே, படிப்படியாக மாறி, மகோன்னத மான மனித மூளையாக மாறிவிட்டது என்று மனித மூளையின் வரலாற்று வடிவத்தை விளக்குகின்றார்கள் வரலாற்றாளர்கள்.

சிந்தனைக்கும் பேச்சுக்கும் பெரும் அடிப்படையாய் விளங்கும் மூள்ையானது, கபாலக்குழியில், மிகப் பத்திரமாகப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. மூளையின் எடை

மூளையின் எடை மிருகத்திற்கு மிருகம் வேறுபாடு உடையதாக இருக்கிறது.

திமிங்கிலம் போன்ற ஒரு ஊர்கிற மிருகம், அதன் பெயர் ஸ்டீகோசாரஸி அதன் உடல் எடையோ 3 முதல் 14டன். ஆனால், அந்த மிருகத்தின் மூளை எடையோ 2% அவுன்ஸ், அதாவது 71 கிராம்.