பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இதன் உடல் எடைக்கும் மூளை எடைக்கும் உள்ள வித்தியாசத்தின் அளவு 1,250,000 என்றால், இதை மூளையற்ற மிருகம் என்றே சொல்லலாம் அல்லவா!

இனி, மனிதருக்கும் மற்ற மிருகங்களில் சிலவற்றிற்கும் உள்ள மூளையின் எடையையும் தெரிந்து கொள்வோம்.

மனித மூளையின் எடை 3 பவுண்டு (1.4 கிலோ)

ஒரே உடல் எடையுள்ள நாய், குரங்கு, மனிதர் இந்த மூவருக்கும் உள்ள மூளையின் எடை, நாய் % பவுண்டு, குரங்கு 1 பவுண்டு, மனிதருக்கு 3 பவுண்டு என்பதாகக் கண்டறிந்திருக்கின்றார்கள். -

மூளையும் கம்ப்யூட்டரும்

மூளையைப் போல கம்ப்யூட்டரும் ஒரு ஒப்பற்ற கருவி என்று புகழ்வார்கள். மூளையை விட இன்னும் சிறப்பான ஆற்றல்மிக்கது என்றும் வர்ணிப்பார்கள். -

கம்ப்யூட்டர் சொன்னதை மறப்பதில்லை. சரியாகச் செய்து முடிக்கும். மனித மூளையை விட விரைவாகச் செய்து விடும். உலகமகா சதுரங்க வீரர்களையும் கூட தோற்கடித்து விடும் திறமை உடையது.

என்றாலும், கம்ப்யூட்டருக்கு உணர்ச்சி இல்லை. நகைச் சுவை போன்றவற்றை அனுபவித்து மகிழும் சுவை உணர்வு இல்லை. நன்மை தீமைகளை உணரும் ஆற்றலில்லை. ஒரு முறை நடந்ததை, நினைவுபடுத்தித் தொகுத்து வைத்துக் கொள்ளும் திறனில்லை என்பார்கள்.

ஆனால், மனித மூளைக்கு நிகர் மனித மூளை தான் என்பதே, மாமேதைகளும் ஒத்துக் கொண்ட உண்மை நிலையாகும். உயர்ந்த நிலையாகும்.