பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் - 191

மனித மூளையை தொலைபேசி அஞ்சல் நிலையத்திற் கும் ஒப்பிட்டுக் காட்டுவார்கள்.

தொலைபேசி நிலையத்திற்கும், துரத்தில் உள்ள வீடு களின் தொலைபேசிகளுக்கும் தொடர்புகளை உண்டாக்கும் கம்பிகள் நிறைய உண்டு. அந்தத் தலைமை நிலையத்திற்கு உள்ளே செய்திகளைக் கொண்டு வருகிற கம்பிகளும், வெளியே கொண்டுபோகின்ற கம்பிகளும் நிறைய இருப்பது போலவே, மூளைக்கும் உடல் உறுப்புகளுக்கும் இடையே, எண்ணிக்கையில் அடங்காதக் நரம்புகள் இருக்கின்றன.

மனித கம்ப்யூட்டர் மூளை

மனித மூளையில் ஏறத்த்ாழ 11,000 மில்லியன் செல்கள் இருக்கின்றன.

ஏறத்தாழ 10,000 மில்லியன் நியூரான்களும், ஆயிரம் மில்லியன் துணை நிற்கும் செல்களும் இருக்கின்றன.

இத்தகைய அற்புதமான அமைப்புள்ள மூளையை இலத்தீன் மொழியில் cerebrum என்றும், கிரேக்க மொழியில் Encephalon என்றும் அழைக்கின்றார்கள். -

மூளையானது 20 வயது வரை வளர்ந்து கொண்டே வருகிறது. பிறந்த குழந்தையின் மூளை எடை 370 முதல் 400 கிராம் வரை இருக்கும். ஒரு வயதாகும்போது, அதன் எடை இருமடங்காகி விடுகிறது. 4-5 வயதில், மும்மடங்காகி விடுகிறது. இந்த வயதிலிருந்து தொடங்கி 20 வயது வரை, மூளையின் எடை பொதுவாக, அதிகரித்துக் கொண்டே வருகிறது. “ . . . . .

சாதாரணமாக, ஒரு மனிதரின் மூளையின் எடை 3 பவுண்டு ஆகும். நல்ல அறிவாற்றல் மிகுந்த மேதையின் மூளை எடை 4.4 பவுண்டு என்கிறார்கள். சான்று,