பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆங்கிலப் பெருங் கவிஞன் லார்டு பைரனின் மூளை 4.4 பவுண்டு ஆகும்.

மூளையும் உறைகளும்.

மூளையானது தலையில் உள்ள கபாலக் (கிரேனியல்)

குழியில் வீற்றிருக்கிறது. இதனுடன், முதுகெலும் பின் உச்சபாகம் தொடர்பு கொண்டுள்ளது.

மூளையைச் சுற்றி மூன்று உறைகள் இருக்கின்றன.

1. வெளி உறை: வெளிப்புறமாக, மிகவும் கெட்டியான உறையாக அமைந்திருக்கும் உறைக்கு டியூராமேட்டர் (Dura mater) grgrgy @Ljuuri.

2. இரத்தக் குழாய்கள் நிறைந்ததாகவும், மூளை, தண்டுவடம் போன்றவற்றைப் பாதுகாக்கும் உறையாகவும் அமைந்த உறைக்கு பயாமேட்டர் (Piamater) என்று பெயர்.

3. நடுஉறை: இவ்வாறு உறைகளுக்கு இடையில் திரவம் ஒன்று இருப்பதுடன், மேலுறையையும், கீழுறையையும் இணைப்புத் திசுக்கள் இணைக்கின்றன. இந்த உறைக்கு அரக்னாய்டு மெம்ப்ரேன் (Arachnoid membrane) என்று பெயர். -

மேற்கூறிய மூன்று உறைகளுமே, மூளைக்குப் பாதுகாப்பாக உள்ளன. மூளைக்கு மேலே உள்ள தலை எலும்பு, அதற்கு மேலே தோல், அதன் மேலே மயிர்த்திரள்கள் என இருந்து, மூளையைக்காக்கின்றன.

மண்டை ஒட்டை நாம் திறந்து உள்ளே பார்க்கிறபோது, மூளையின் தோற்றமானது மென்மையான, சாம்பல் நிறம் மற்றும் வெள்ளைப் பொருள்களாகத் தெரிகிறது.