பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 195

சுவை, வாசனை, ஒலி அறியும் நரம்புகள், இதன் பக்க வாட்டில் அமைந்திருக்கின்றன.

பெரு மூளையின் அடிப்புறத்திலிருந்து 12 ஜோடி நரம்புகள் செல்கின்றன. இவைகளுக்கு கபால நரம்புகள்(Cranial Nerves) என்று பெயர். இவைகள் முக்கியமாக, தலையில் இருக்கும் பொறிகளுக்கும் தசைகளுக்கும் சென்று, தொடர்புபடுத்தி, சிறப்பான பணிகளை ஆற்றுகின்றன.

4. தசைகளின் அசைவிற்குப் பெருமூளையே பெரிதும் காரணமாக அமைந்திருக்கிறது.

உறுப்புக்களிலிருந்து வருகிற செய்திகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப, பதில் காரியத்தை செய்வதற்கு கட்டளையை அனுப்பும் காரியத்தை உடினடியாகச் செய்து வைக்கிறது. -

உதாரணமாக, ஒருவன் நடந்து போய்க் கொண்டிருக் கிறான். எதிரே பாம்பு ஒன்று படம் எடுத்துக் கொண்டு நிற்கிறது. அதைப் பார்த்தவுடன் அச்சப்படுகிறான் அவன். அந்த அச்ச உணர்வு பெரு மூளைக்குப் போகிறது. அவனை தப்பி ஓடு என்ற கட்டளையை மூளை அனுப்பிவைக்கிறது. ஒடும் திசையை, ஒட வேண்டிய விரைவை, பெரு மூளை திட்டமிட்டுத் தர, தேகம் செயல்படுகிறது.

இதிலிருந்து, நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். நாம் நினைவோடு செய்கின்ற செயல்கள், விருப்பப்பட்டு செய்கிற இச்சைச் செயல்கள் எல்லாம் பெரு மூளையிலிருந்து தான் பிறக்கின்றன. -

2. Hvepavat (cerebellum)

முகுளத்திற்குப் பின்புறமாக், பெரு மூளைக்குக் கீழே, கபாலத்தின் அடிப்பாகத்தில், சிறுமூளை அமைந்திருக்கிறது.