பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO * டாக்டர். எல. நவராஜ் செல்லையா

தண்டு வடத்தின் பணிகள்

தண்டு வடத்தின் பணிகள் இரண்டு வகைப்படும்.

1. உணர்ச்சி நரம்புகளின் உந்துதல்களால் ஏற்படும் கிளர்த்தல்களைக் கடத்துதல்.

2. அனிச்சைச் செயல்களை நடத்துதல்.

இந்தப் பணிகளை இன்னும் சற்று விரிவாகக்

காண்போம்.

1. தேகத்தின் பல பாகங்களில் இருந்தும், மூளைக்குச் செல்கின்ற உணர்ச்சி நரம்புகளும், மூளையிலிருந்து தசைகளுக்குச் செல்கின்ற நரம்புகளும், தண்டு வடத்தின் வழியாகவே செல்கின்றன.

செய்திகளை நரம்புகள் மூலமாகப் பெற்றுக் கொண்ட மூளையானது, உத்திரவுகளைப் பிறப்பித்துத் தருகின்றது.

இப்படிப்பட்ட உத்திரவுகளைத் தாங்கிச் செல்கின்ற ஒரு குழாயாகவே, தண்டு வடம் உதவுகிறது. பணியாற்றுகிறது.

விபத்து நேர்கிற சமயத்தில், தண்டு வடம் பாதிக்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விபத்துக்குள்ளானவரால் கைகால்களை, அசைக்கக் கூட முடியாமற் போய்விடுகிறது. அதற்குக்காரணம், தண்டுவடப் பாதிப்பால் மூளையிலிருந்து அனுப்பப்படுகிற உத்திரவு களைத் தசைகள் பெற முடியாமற்போவதுதான்.

தண்டுவடம், தன்மையோடு செயல்படுகிறபோதுதான், தகுந்த செயல்களை, உகந்த நேரத்தில் சிறப்பாகச் செய்ய முடிகிறது. -

தண்டு வடம் சில சமயங்களில், தானாகவே சில கட்டளைகளைக் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களுக்கு ஆளாகி

விடுகிறது.