பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 2O1

அதற்கு உணர்ச்சி நரம்புகளும், செய்கை நரம்புகளும் தண்டுவடத்துடன் இணைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.

மனிதர்களுக்கு எப்பொழுதுமே அவசரம்தான். அவசர - நேரங்கள் மனிதர்களுக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.

உதாரணமாக, கையை நீட்டுகிறோம். தெரியாமல் ஒரு சூடான பொருளின்மீது பட்டுவிடுகிறது. உடனே கையை வெடுக்கென்று நம்மை அறியாமலேயே இழுத்துக் கொள்கிறோம். -

பூங்காவில் உட்கார்ந்திருக்கும் பொழுது, கையைப் பின்புறமாக ஊன்றிக் கொண்டு எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று ஏதோ கடிப்பதுபோல் உணர்கிறோம். உடனே கையை வெடுக்கென்று எடுத்துக் கொள்கிறோம். ஆமாம், எறும்பு கடித்திருக்கிறது.

கையை எடுத்துக் கொள்ள, இழுத்துக் கொள்ள உத்தரவு தந்தது எது? மூளையா? அல்ல. தண்டுவடம்தான்.

இவ்விதம் மூளையின் உத்திரவின்றி, தானாகவே தண்டுவடம் உத்திரவைத் தந்து, சூழ்நிலையைச் சமாளித்து விடுகிறது. -

இந்தச் செயல்களுக்குத்தான் அனிச்சைச் செயல்கள் (Reflex Action) என்று ஒரு பெயரைத் தந்திருக்கின்றார்கள்.

2. அனிச்சை செயல்

தண்டுவடத்தில், தசை நடவடிக்கையை எடுக்கின்ற கேந்திரங்கள் பல உண்டு.

ஒவ்வொரு தண்டுவடப் பகுதியும், உடலின் ஒவ்வொரு பாகத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. பொறுப்பும் கொண்டிருக்கிறது. - -