பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 2O3

இந்தச்சோர்வும்களைப்பும் மிகுதியாகப் போகிறபோது, மூளையும் நரம்புகளும் பாதிக்கப்படலாம். அதன் தொடர்பாக, தீங்குகளும் நேரிடலாம்.

அதனால் தான், தூக்கம் மனிதர்களுக்குக் கட்டாயம் தேவை என்று வலியுறுத்திக் கூறுகின்றார்கள்.

தூக்கத்தினால் என்ன பயன் விளைகிறது என்றால், தூக்கத்தின்போது, நரம்பு செல்கள் நன்கு ஒய்வெடுத்துக் கொள்கின்றன. அத்துடன், மீண்டும் உணர்வு பூர்வமாக செயல்படக் கூடிய திறமைத் தன்மையையும் புதிப்பித்துக் கொள்கின்றன.

தூக்கத்தின்போது, தேகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகின்றன. அதாவது, சுவாசம் ஆழமடைகிறது. இருதயத் துடிப்பு மெதுவாகிக் கொள்கிறது. செல்களில் ஏற்படுகிற வளர்சிதை மாற்றம் குறைந்து போகிறது. இன்னும், உடலுறுப்புக்கள் நிம்மதியாக, செயலை குறைத்துக் கொண்டு ஒய்வு பெற்றுக் கொள்கின்றன.

தூக்கத்தின் போது, எல்லா உறுப்புக்களில் இருந்தும், கழிவுப் பொருட்கள் நீக்கம் பெறுகின்றன. அதனால் தூங்கி விழித்ததும், உறுப்புக்கள் தூய்மையடைந்து, மீண்டும் உன்னதமான உழைப்புக்குத் தயாராகிவிடுகின்றன. 2. வெளிப்புற நரம்பு மண்டலம்

மூளையும் தண்டு வடமும், நரம்பு மண்டலத்தின்மத்திய பகுதியில் இருப்பதால், இதை மத்திய நரம்பு மண்டலம்

எனலாம்.

12 ஜோடி கபால நரம்புகள் மூளையிலிருந்தும், 31 ஜோடி தண்டுவட நரம்புகள் தண்டு வடத்திலிருந்தும், வெளியே வருகின்றன. இந்த நரம்புகளிலிருந்து பல்வேறு உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும், பலவும் கிளைகளாகப்