பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 2O7

நரம்பு செல்கள் எல்லாம் அமைப்பிலும், அளவிலும், வடிவத்திலும் வேறுபட்டவைகளாகவே விளங்குகின்றன.

ஒரு நியூரோன் மூன்று பாகமாகப் பிரிந்திருக்கிறது.

1. ggstaffluen (Neucleus)

2. %ανάτ (Axon)

3. (6)l_girl gogl Gr (Dendrites)

ஆக்ஸான்கள் நீளமானதாகவும், மெல்லியதாகவும் உள்ள அமைப்பைப் பெற்று, செல்கள் பகுதியிலிருந்து உணர்வுகளைக் கடத்துகின்றன.

டென்ரைட்டுகள் பொதுவாகக் குட்டையாகவும்,

கிளைகள் விட்டும் இருந்தும், செல்களுக்கு உணர்வுகளைக் கடத்துகின்றன.

நரம்புத்திசு

நரம் பு செல்களும் அவற்றின் கிளைகளும் சேர்ந்து கொண்டு, நரம்புத் திசுக்கள் என்ற அமைப்பை உண்டாக்கி

விடுகின்றன.

ஒரு நரம்பு செல்லிலிருந்து மற்றொரு நரம்பு செல்லுக்கு, இந்த உணர்வுகள் கடத்தப்படுகின்றன. இந்த வேகம் மின்சாரம் செல்கின்ற வேகத்தைக் காட்டிலும், வேகம் குறைவாகவே விளங்குகிறது. - *

நரம்புத்திசு வழியாகக் கிளர்த்தல் கடத்தப்படுவதுடன், அதன் வேகம் பற்றி விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர்.

தவளையில் இந்தக் கிளர்த்தல் வேகம் நொடிக்கு 2: முதல் 27 மீட்டர் (வேகம்) ஆக இருக்கிறது என்பர்.

மனிதரில் இந்தக் கிளர்த்தல், நொடிக்கு 90 மீட்டர் வேகம் என்று கூறுவர்.