பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கழிவு மண்டலம் உணவும் கழிவும்

நாம் உண்ணுகிற உணவு எல்லாமே, உடலுக்கு சத்தாகிப் போவதில்லை. உணவுப் பொருட்கள் பலவும் ஜீரணிக்கப் படுகின்றன. எஞ்சிய பொருட்கள் சில செரிமானம் ஆகாமல் போகின்றன.

செரிமானம் ஆகாமல், பயன்படாமல் இருப்பவைகள் எல்லாம் தேவையற்றவை ஆகின்றன. சத்துக்களோ இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு விடுகின்றன. சக்கைகள் தனித்து விடப்படுகின்றன.

சத்தற்ற இந்த சக்கைகள்தான், கழிவுப் பொருட்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.

கழிவுப் பொருட்கள் செல்களால் உற்பத்தி செய்யப் படுகின்றன. அவை இரத்தத்தால் வேறிடத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. அவை உடலுக்குள்ளேதங்கியிருக்கவிட்டு விட்டால், உறுப்புக்கள் திண்டாடிப் போய்விடும். உடல் நலமும் கெட்டுப்போய் விடும்.

இவ்வாறு, வெளியேற்றுகிற வேலையைத்தான் கழிவு மண்டல உறுப்புக்கள் கவனித்துக் கொள்கின்றன.

கழிவு மண்டலத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்புக்கள் நான்கு. அவை வருமாறு:

1. சிறுநீரகங்கள் (Kidneys)

2. Gori (skin)

3. நுரையீரல்கள் (Lungs)

4. Gusong;LGo (Large Intestine)