பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

சிறுநீரக நுண்குழல்கள், சிறிய இரத்த நாளங்களுடன் நெருக்கமாக இணைந்து செயலாற்றுகின்றன. அந்த இணைப்பின் உறுப்புக்கு நெப்ரான் (Neuphron) என்று பெயர். -

இனி நெப்ரான் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள் வோம்.

நெப்ரான்

நெப்ரான்களில் தான் சிறுநீர் உண்டாகிறது. இரு சிறு நீரகங்களிலும் சேர்த்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நெப்ரான்கள் இருக்கின்றன. -

சிறுநீரகக் கார்டெக்ஸ் பகுதியில், ஒரடுக்கு எபிதீலியத் தால் உருவான, கோப்பை போன்ற ஒரு பாகம் உண்டு.அதை பெளமேன்ஸ் காப்சியூல், (Bowman’s Capsule) என்பார் கள். இதை தமிழில் பெளமேன் உறை என்றும் கூறுவார்கள்.

இந்த உறை இரு சுவர் கொண்ட கோப்பை போல தோற்றம் அளிக்கிறது. இது சிறுநீரக நுண்குழலுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. -

இதிலிருந்து சிறிய வளைவுகள், பெரிய வளைவுகள் கொண்ட ஒரு நீண்ட குழாய், மெடுல்லாவில் உள்ள சிறுநீர் சேகரிக்கும் குழாயில் சென்று சேர்கிறது. இவ்வாறு தொடர்ந்து வளைந்துவரும் குழாயை ஹென்லே வளைவு, (Henle) GTgrl 1m frsgir.

பெளமேன் கோப்பையில்; ஒரு தமணியும் ஒரு சிரையும் வந்து முடிச்சுபோல் காணப்படுகிறது. இதற்கு குளோமருலஸ் (Glomerulus) grairm @Luff. -

இந்த குளோம ரூலஸில், உள்ள இரத்தத்திலிருந்து, உப்புக்களையும் குளுகோசையும் பிரித்தெடுக்கும் வேலை,