பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 217

பெளமேன்ஸ் கோப்பையில் நிகழ்கிறது. இங்கிருந்து சேகரிக்கும் குழாய்க்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நெப்ரான்களில் சிறுநீரக நுண் குழல்கள் தவிர, சிறு நீரகங்களில் சேகரிக்கும் நுண்குழல்களும் காணப்படுகின்றன. இவை சிறுநீரை அகற்ற உதவி புரியுமே தவிர, சிறுநீரை உருவாக்க இயலாது. -

நெப்ரான்களில், சிறுநீர் உருவாகும் அமைப்பு, இரண்டு கட்டங்களில் நடைபெறுகிறது.

முதலாவது - சிறுநீர் உருவாக்கம்.

இரண்டாவது கட்டத்தில், இறுதி சிறுநீர் உருவாக்கம் நடைபெறுகிறது. -

நெப்ரானின் நுண்குழல்களில் உள்ள முதலாவது சிறுநீரும், அதிலிருந்து தண்ணீரில் கலந்துள்ள சில பொருட்களும், தண்ணிரும் இரத்தத்திற்குள் மீண்டும் கிரகிக்கப்படுகின்றன.

இவ்வாறு இறுதி சிறுநீர், நெப்ரான்களில் சேகரிக்கும் நுண் குழல்களுக்குள் சென்று, சிறிய அடிக்கிண்ணத்திற்கும், பிறகு பெரிய அடிக்கிண்ணத்திற்கும் போய், பிறகு சிறு நீரக வளைவிற்குள்ளே செல்கிறது. அதன்பின், சிறுநீரக வளைவிலிருந்து சிறுநீரகக் குழாய் வழியாக, சிறுநீர்ப்பையை அடைந்து, அங்கிருந்து வெளியேற்றப்படுகிறது.

சிறுநீரகத்தின் பணிகள்

1. இரத்தத்தில் உள்ள உப்பின் செறிவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.

2. இரத்தத்தில் கலந்துள்ள சில உணவுப் பொருள் துகள்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.