பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எபிதீலியத் திசுவானது. தோலின் வெளிப்புற அடுக்காகவும், மூக்குப்பகுதியில் உள்ள சளிப்படலங்களில் உள் உறையாகவும், சுரப்பிகளாகவும் (Glands) இயங்குகிறது.

மூன்று Ga &5 : செல்களின் வடிவத்தையும் அமைப்பையும் பொறுத்து, எபிதீலியத் திசு மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

1. ஸ்குவோமஸ் எபிதீலியம் (Squemous)

செதில் போன்ற அமைப்புடன் ஸ்குவோமஸ் எபிதீலியம் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு திசு செல்லிலும் ஒவ்வொரு உட்கருவும் இருக்கிறது. எதற்கும் அடிப்படை ஆதாரமாய் அமைந்து, அடியில் காணப்படுகிற தாக இருப்பதால், இதனை e.g. logg Groul Goub (Basement memberane) என்று அழைப்பார்கள்.

இப்படிப்பட்ட திசுவானது நுரையீரலில் காணப்படு கிறது. தரையில் ஒடுகளை அடுக்கி வைத்திருப்பது போன்ற தோற்றம் உள்ளதாக, இந்த எபிதீலியம் அமைந்திருக்கிறது. 2. காலம்னார் எபிதீலியம் (Columnar)

தூண் போன்ற அமைப்பையுடையவை காலம்னார் செல்கள். இந்த வகை செல்கள் நீளமாக இருக்கும். அதன் நடுவில் ஒரு உட்கரு காணப்படும். இவை எல்லா க்ரப்பிகளிலும், நாளங்களிலும் காணப்படுகின்றன.

3. )a)uum srl %<5luulb (Ciliated Epithelium)

இதை சிலியாகொண்டா எபிதீலியம் என்பார்கள். இது கனசதுர அமைப்புடையதாக விளங்குகிறது. இதுவும் காலம்னார் எபிதீலியத்திசு போன்றே அமைந்திருக்கிறது.

இந்த எபிதீலியத் திசுவானது, மூச்சுமண்டலப் படலத்தின் உறையாக விளங்குகிறது. இது நுரையீரலின் உள்ளே தூசி எதுவும் போகாமல் தடுத்துவிடுகின்றது.