பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

3. இரத்தத்தில் உள்ள அமிலத்த்ை அகற்றி, டாக் சோமியா எனும் நோய்வராமல் காக்கிறது.

4. பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளை தேகத்தில் இருந்து அப்புறப்படுத்தி, வெளியேற்றி, நலம் சேர்க்கிறது.

5. தேகத்தில் தேவைக்கு மேல் உள்ள நீரை, சிறுநீர் மூலம் வெளியேற்றி, சமநிலையைக்காக்கிறது. 2. Gogao (Skin)

தேகத்தின் மற்றொரு கழிவுத் திறப்பாக, தோல் இருக்கிறது. தேகத்தில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களான உப்புக்கள், மிகுதியான தண்ணிர் போன்றவற்றை வியர்வையாக மாற்றி, வெளியே அனுப்புகிற வேலையை தோல் சிறப்பாகச் செய்கிறது. தோலும் அமைப்பும்

தோல், மனித தேகத்தின் வெளிப்போர்வையாக விளங்குகிறது. இது, ஒரு நுண்ணிய, மிகவும் சிக்கலான அமைப்புக் கொண்டதாகவும் இருக்கிறது. -

தோல், இரண்டு பகுதியாகப் பிரிந்து பணியாற்றுகிறது.

1. Guogi, Ggmai (Epidermis)

2. egyl#Ggfrv (Dermis) /. மேல்தோல்

உடலுக்கு மேலாகத் தெரியும் தோல், எபிதீலியம் திசுக் களால் அடுக்காகிக் காணப்படுகிறது. -

இந்தத் தோல் பகுதியில் இரத்தத் தந்துகிகள் கிடையாது.

ஆதலால், இவை தோலின் அடிப்பாகத்தில் அமைந்

துள்ள இரத்தத் தந்துகிகளிலிருந்து கசிகின்ற இரத்தத்தையே பயன்படுத்திக் கொள்கிறது. - -