பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 219

தோலுக்கு நிறம் உண்டு. இந்த நிறத்தை உண்டு பண்ணுவதற்கு நிறமி என்று பெயர். இந்த நிறமிகளை உண்டுபண்ணுகின்ற செல்லுக்கு மல்பிஜியன் செல் என்று பெயர்.

மல் பிஜியன் செல் உண்டு பண்ணுகிற நிறமி, அதிக அளவில் இருந்தால், தோல் கறுப்பு நிறமாகி விடுகிறது. நிறமி குறைந்த அளவில் இருந்தால், தோல் சிவப்பு நிறமாகி விடுகிறது. - தோலின் கனமும் பரப்பும்

- வயது வந்தவர்களின் தோலின் மொத்தப் பரப்பளவு 15 சதுர மீட்டராகும். தோலின் பருமன் 1 முதல் 4 மில்லி மீட்டர் அளவு இருக்கிறது.

. நமது தேகத்தின் மெல்லிய தோல் பகுதி, கண் இமையில் இருக்கிறது. நமது தேகத்தின் மிகவும் பருமனான பகுதி, காலின் அடிப்பாதங்களில் காணப்படுகிறது. 2. sw Gas (Dermis)

தோலின் ஆழமான பகுதியையே உண்மையான தோல் என்கிறார்கள். இது பைபிரஸ், எலாஸ் டிக் திசுக்கள் கொண்டதாக விளங்குகிறது.

இதில் ஏராளமான கொல்லேஜன் இழைகளும், நெகிழ்வு இழைகளும் நிறைய காணப்படுகின்றன.

இந்த நெகிழ்வு இழைகள், நெகிழ்வுத் தன்மையை அளிப்பதால் தான், தோலானது எளிதாக இயங்கவும், நீளவும் முடிகிறது. --

தோலின் ஆழமான அடுக்கில், ஏராளமான இரத்தக் குழாய்கள் இருக்கின்றன. -