பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 221 விசர்வை வரும் அளவு

தட்பவெப்ப நிலை, சுற்றுப்புறச் சூழ்நிலை, காற்றின் ஈரக் கசிவு நிலை, தேகப் பயிற்சி மற்றும் உழைப்புக்கு ஏற்றவாறு வியர்வை வெளிப்பட்டுக் கொள்கிறது.

ஒரு நாளில் அதாவது 24 மணி நேரத்தில், சராசரியாக ஒருவருக்கு வருகின்ற வியர்வையின் அளவு, 500 முதல் 600 மில்லி லிட்டராகும். -

வெப்பமான சூழ்நிலையிலிருந்து, கடுமையான உழைப்பினை மேற்கொள்ளப்படுகிற போது, 15 லிட்டர்கள் வரை வியர்வை வெளிப்படுகிறது என்கிறார்கள் மருத்துவ

வல்லுநர்கள். -- -

கடுமையான உடற்பயிற்சி செய்கிறப்ோது, ஒரு மணி நேரத்தில் 4 லிட்டர் தண்ணீர் வெளியாகிறது என்பதும் ஒரு கணக்கு.

ஒரு குறிப்பு: வேறு வாடை தேகத்தில் எப்படி வருகிறது? பலருக்கும் சந்தேகம். -

வியர்வையில் தண்ணிர், யூரியா, உப்பு போன்று LJ Gι) பொருட்கள் காணப்படுகின்றன. -

தேகத்தில் சில இடங்களில் வருகின்ற வாடை, சகிக்க இயலாதவாறு இருப்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

அக்குள், மற்றும் வெளிப்புற பால் உறுப்புகள் ஆகிய வற்றின் தோல்பகுதியில் இருக்கும் சுரப்பிகள், அமைப்பில் வியர்வைச் சுரப்பிகள் போல இருந்தாலும், செயலில் மாறானதாக சுரந்து விடுகிறது. அந்தச் சுரப்புகள் தான். வேறு மாதிரியான வாடையைக் கொடுத்து விடுகிறது.