பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 21

இனி ஒருசில எபிதீலிய வகையினைக் காண்போம்.

குடல் எபிதீலியம்: உணவு ஜீரணத்தின்போது உருவாகும் சத்துப் பொருட்களைக் கிரகிப்பதே இதன் தலையாய பணியாக இருக்கிறது.

சுரப்பி எபிதீலியம் : சுரப்பிகள் எனப்படும் சிறப்பு உறுப்புக்களின் முக்கிய திசு, சுரப்பி எபிதீலியம் ஆகும். சுரப்பி எபிதீலியத்தின் செல்கள், சில விஷேஷப் பொருட்களை சுரக்கின்ற பணியை செம்மையாய்ச் செய்கின்றன.

சிறுநீர் சுரப்புக் குழல்களின் எபிதீலியமானது கழிவுப் பொருட்களை அகற்றுகிற பணியில் செயல்படுகின்றன.

சிறுநீர் சுரப்புக் குழல்களின் எபிதீலியமானது கழிவுப் பொருட்களை அகற்றுகிற பணியில் செயல்படுகின்றது.

சவ்வுப் படல எபிதீலியம் என்பது, படலங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்வதைத் தடுக்கின்றது. அதாவது இவை ஊனீரைச் சுரந்து, உராய்வுகளைக் குறைந்த அளவில் வைத்துக் காக்கின்றன.

1. எபிதீலிய திசுவினால் ஏற்படும் நன்மைகள்:

l, வெப்பம் மற்றும் வெளிப்புறத் தாக்குதல்களால் நிகழும் தீய விளைவுகளிலிருந்து, இது உயிரினத்தைக் காக்கிறது. அதாவது, நோய்க் கிருமிகள் உள்ளே நுழையாமல் பாதுகாப்புத் தருகிறது.

2. வளர்சிதை மாற்றத்திலும் (Metabolisom) இது உரிய

பங்கு கொள்கிறது.

3. கருப்பைக் குழலில் அமைந்துள்ள சிலியா கொண்ட எபிதீலியத்தின் அதிர்வுகளால், கருமுட்டை நகர்த்தப்படுகிறது.