பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

சிறப்புப் புலன்கள் பஞ்சபூதம் - பஞ்சேந்திரியம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவை பஞ்ச பூதங்கள் என்று பெருமையாகப் பேசப்படுகின்றன. இவை உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. இணையில்லா தவை. மிகமிகத் தேவையானவை.

கண், காது, மூக்கு, வாய், தோல் ஆகிய ஐந்தும், பஞ்சேந்திரியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை ஐம்பொறிகள் என்றும் அழைப்பர். -

இவைகள் உடல் வாழ்க்கைக்கும் உலக வாழ்க்கைக்கும் உறுதுணையாக மட்டுமின்றி, உயிர்த்துணையாகவும் இருந்து உதவுகின்றன. -

ஏற்கனவே, மூக்கு, வாய், தோல் பற்றி எழுதியிருக் கிறோம். விடுபட்டுப்போன, இரண்டு சிறப்புப் புலன்கள் கண்ணும் காதும். -

இந்தப் பகுதியில் கண், காது பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

/. & Go! (Eye) அமைப்பும் சிறப்பும்

காண்பதற்கு மட்டும் கண்கள் பயன்படவில்லை. மூளைக்கு செய்திகளைச் சொல்லவும் கண்கள் பயன்படு கின்றன.

கண்களை மூளையின் ஒரு பகுதி என்று கூடச் சொல்ல

லாம். அதாவது வெளியுலகம் பற்றி மூளைக்கு விஷயங்களை விளக்குகின்ற உறுப்பாகவும் விளங்குகிறது.