பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 233

-

பாவை பார்க்க, விரிவடைந்து கொள்கிறது. இப்படி LJITGOOQ/ இயங்க உதவும் தசைக்கு சிலியா தசை என்று பெயர்.

சிலியா தசையில் இருந்து புறப்படுகிற தசைநார்கள் (Ligaments) இருபுறமும் குவிந்திருக்கும் ஒரு லென்ஸ்ைத் தாங்கி நிற்கிறது. - - - -

3. உட்படலம்: இந்த உட்படலமே விழித்திரை(Retina) * எனும் பெயரைப் பெற்றிருக்கிறது.

மிகவும் சிக்கலான அமைப்புடைய விழித்திரையில், கம்புகள் மற்றும் கூம்புகள் என்கிற சிறப்புச் செல்கள் இருக்கின்றன. - -- கூம்புகள் (Cones) கம்புகள் (Rods)

ஏறத்தாழ 7 மில்லியன் கூம்புகளும், 125 மில்லியன் கம்புகளும் ஒவ்வொரு கண்ணிலும் அமைந்திருக்கின்றன.

கூம்புகள் /, அங்குல நீளமும், ‘/, அங்குலக் கனமும் கொண்டவையாக விளங்குகின்றன. கம்புகளோ இன்னும் குட்டையாகவும், கனம் உள்ளதாகவும் இருக்கின்றன.

மூன்று விதமான கூம்பு செல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தைக் காணும் சக்தி பெற்றிருக்கின்றன. அந்த முக்கியமான மூன்று வண்ணங்கள் சிவப்பு, நீலம், பச்சை -

நிறக்குருடு (Colour blindness) என்று நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். சில விதமான கூம்பு செல்கள் கண்ணில் குறைந்தோ அல்லது இல்லாமல் போகிறபோது தான், குறிப்பிட்ட சில நிறங்களைக் காண முடியாமற் போகிறது. இதைத் தான் நிறக்குருடு என்பார்கள். -

விழித்திரையிலிருந்து, உணர்ச்சி நரம்புகள் (Optic Nerves) மூளைக்குச் செல்கின்றன.