பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந் து கொள்வோம் 237

‘கண் பாதிக்கப்படும் நேரத்தில், காட்சிகள் தெரியாமல் அல்லது அரை குறையாகத் தெரிகின்றன.

விழித்திரையின் மீது தெளிவான பிம்பம் விழா விட்டால், பொருட்கள் சரியாகத் தெரியாது.

சிலருக்குத் தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்க முடியாது. இன்னும் சிலருக்குக் கிட்டத்தில் உள்ள. பொருட்களைப் பார்க்க முடியாது.

கிட்டத்துப்பார்வை (மையோபியா)

வெளியில் தூரத்தில் தெரியும் பொருட்களின் பிம்பம், விழித்திரையில் படாமல், அதற்கு முன்னாலேயே விழுந்து விடுகிறது. இதற்குக் கிட்டப்பார்வை (Short sight) என்று பெயர்.

கிட்டப் பார்வை நோயாளிகளின் லென்சுக்கும் விழித்திரைக்கும் உள்ள தூரம் சகஜமாக இருப்பதைவிட, அதிகமாக இருக்கும். இந்தக் குறையைப் போக்கி, சீர்செய்து காண, இருபுறக் குழிலென்ஸ் (Biconcave lens) கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். *

தூரப்பார்வை (ஹைபர்மெட்ரோபியா)

ஒரு சிலருக்குத் தூரத்தில் உள்ள பொருட்கள் நன்றாகத் தெரியும். அருகில் உள்ள பொருட்கள் தெளிவில்லாமல் தெரியும். -

ஏனென்றால், அருகில் இருக்கும் பிம்பங்கள், விழித் திரைக்குப் பின்னால் போய் விழுவதால், விழித்திரையில் பிம்பம் தெளிவாகத் தெரியாமல் போகிறது. இதையே தூரத்துப்பார்வை (Long sight) அல்லது எட்டத்துப் பார்வை என்பார்கள். - -