பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

3. இரத்தத்தில் வேகமான ஒட்டம் மட்டுமா நிகழ்கிறது: இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அளவிலும், ஆக்கபூர்வமான வலிமையிலும் கூடிக்கொள் கிறது.

சிவப்பணுக்கள் உயிர்க்காற்றைக் கவர்ந்து கொள் வதுடன், அதைக் கொண்டுபோய், அனைத்துத் திசுக்களுக் கும், அடிமட்ட செல்களுக்கும் கொடுத்து, அவற்றை ஆற்றல் மிக்கதாக ஆக்கிவிடுகின்றன.

4. தேகப் பயிற்சிகள் செய்கிறபோது, தேகத்தின்

உஷ்ணநிலை உயர்ந்து போக, தேகத்தில் அதிகமான அளவில் வியர்வை வெளி வந்து ஆவியாகிப் போக, தோல் வழியே உஷ்ணமும் கழிவுப் பொருளும் வெளியேற, உடலின் சரியான உஷ்ணநிலை பராமரிக்கப்படுகிறது. தேகத்தின் துய்மையும் பாதுகாக்கப்படுகிறது. -

5. தேகத்தில் செல்களில் ஏற்படுகிற வளர்சிதை மாற்றம் தான் (Metabolism), தேகத்தை இளமையுடனும் செழுமை யுடனும் காத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட வளர்சிதைமாற்றம் தேகப் பயிற்சியின் போது, திறமையுடன் நடந்து கொண்டிருக்கிறது.

செல்களுக்கு இரத்தத்தின் மூலம் உணவுச்சத்தும், உயிர்க் காற்றும் தேவையான அளவுக்கு மேலே கிடைப்பதால் தான், இந்த வளர்சிதை மாற்றப் பணி, குறையாமல், கோலாகலமாக நடந்து கொண்டிருக்கின்றன.

6. தசைகள் தான் விசைகள் நிறைந்தவையாக தேகத்தில் விளங்குகின்றன. சக்தியை மிகுதியாகக் கொண்டு.வேலை செய்யும் தசைகள், தங்கள் அளவில் வடிவில் பெரிதாகவும் வலியதாகவும் மாறிக் கொள்வதுடன், தேகத்தின் சிறப்பான பணிகளுக்குத் துணையாக விளங்குகின்றன. காரணம், தசைகளுக்குள் மிகுதியாக இரத்த ஓட்டம் பாய்வதால் தான்.