பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 247

7. தசைகள் இயங்குகின்ற பகுதிகளுக்கு, இரத்தக் குழாய்கள் மிகுதியான இரத்தத்தைக் கொண்டோடிப் போய் கொடுக்கின்றன. இதனால் தசைகள் வேகம் பெறுகின்றன. தங்கு தடையின்றிப் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. 8. தேகத்தில் எங்கும் நிறைந்தும், வியாபித்தும் கொண்டிருக்கின்ற எல்லா செல்களும், இரத்தம் பெறுவதால் உற்சாகமடைகின்றன. ஊட்டம் பெறுகின்றன. உணர்ச்சி மயமாகி விடுகின்றன. அவற்றின் இயக்கங்கள் ஆற்றலில் நிமிர்ந்து நிற்கின்றன. அதனால், தேகத்தின் தோற்றமும், தொய்ந்து போகாத செயல்களும் பயிற்சியாளர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி, மேன்மையை அளித்து விடுகின்றன. 2. நீண்ட காலப் பயன்கள்

1. தொடர்ந்து தேகப் பயிற்சிகள் செய்து வருபவர் களுக்கு, முதுமையடையும் காலம், தாமதப்படுத்தப்படு கிறது. தள்ளி வைக்கப்படுகிறது. சற்று நிறுத்தி வைக்கப்படு கிறது. இளமையின் எழுச்சியும், உணர்ச்சியும், மலர்ச்சியும், தேகத்தில் என்றும் எழில் நடனமாடிக் கொண்டிருக்கின்றன. 2. வாழ்நாளின் காலம் கூடிக் கொள்கிறது. நோய் தாக்கும் தேகங்கள் தாம் நொந்து போகின்றன. நலிந்து போகின்றன. நைந்து சாகின்றன. - -

தெம்பும் தெளிவும், வலிவும் பொலிவும் உள்ள தேகத்திற்கு வாழ்க்கை மட்டும் சிறக்காமல், வாழ்நாளும் கூடிப் போகின்ற வரப்பிரசாதம், இந்தத் தேகப் பயிற்சிகளால் கிடைக்கின்றன. -

3. தேகத்தில் தோன்றுகிற், அல்லது தாக்குகின்ற நோய்க் கூட்டம், திகைத்துப் போகின்றன. பெரும்பாலான சமயங் களில், திரும்பிப் போய் விடுகின்றன. இல்லையென்றால், வந்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.