பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 23

1. Qugib, flasor fift (Blood and Lymph)

2. கலவைத் திசு (connective Tissue Proper)

3. அடர்த்தியான நார்ப் பொருள் இணைப்புத் திசு (Cartillage) 4. எலும்புத் திசு (Bone)

1. இரத்தம் நிணநீர் பற்றிய விவரங்களையும் விளக்கங் களையும் இரத்தம் என்ற பகுதியில் விவரித்திருக்கிறோம்

காண்க.

2. கலவைத் திசு, இதனை இரண்டு வகையாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

(அ) தளர்ந்த நார்ப் பொருள் இணைப்புத் திசு.

(ஆ) அடர்த்தியான நார்ப் பொருள் இணைப்புத்திக உடலில் உள்ள எல்லா உறுப்புக்களிலும், இந்தத் தளர்ந்த நார்ப் பொருள் இணைப்புத் திசுவே நிறையக் காணப்படுகிறது. -

இந்த இணைப்புத் திசுவானது, ஆதார, பாதுகாப்பு, உயிர்ப்புப் பணிகளைப் புரிகின்றது. உறுப்புகளுக்குப் பலமும், நெகிழ்வுத் தன்மையும் அளிக்கிறது. கட்டுமான இழைகளால், இத்தகைய ஆதாரப்பணி செய்யப்படுகிறது.

கொழுப்புத் திசு என்பதும், தளர்ந்த நார்ப்பொருள் இணைப்புத் திசுவினால் உருவானதாகும். இது தோலின் அடி செல் திசுவாகவும், பல் உறுப்புக்களையும், நாளங்களையும் சூழ்ந்துள்ள அடுக்குகளாகவும், குடல் போன்ற பிற வயிற்று உறுப்புக்களோடு இரைப்பையை இணைக்கும் கொழுப்பு மடிப்புக்களாகவும் உள்ளன.

காயங்களிலிருந்து பல உறுப்புக்களை இத்திசு பாதுகாக்கிறது.