பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

செல்வதும்; மூளை தருகின்ற கட்டளைகளை உடலின் பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்வதேயாகும்.

நியூரோன் என்பது நரம்புச் செல்லாகும். ஒவ்வொரு நியூரோனின் அங்கத்திலும் ஒரு உட்கருவும், சைடோ பிளாசமும் உண்டு.

நரம்பு செல்கள் அவற்றின் வேலைகளை வைத்தே, பல பெயர்களைப் பெறுகின்றன. அதாவது உணர்வு வகை, இணைப்பு வகை, பொறுத்து வகை என்பதாகும்.

ஒவ்வொரு நரம்பு செல்லிலும் இரு வகையான கிளைகள் உள்ளன.

டென்ட்ரைட் (Dentite) என்பது ஒரு கிளை ஆக்ஸான் அல்லது நியூரைட் என்பது மற்றொரு கிளை. -

டென்ட்ரைட் என்னும் கிளை, கிளர்த்தலை (உணர்வு பெறுவதை) உடலுக்குக் கடத்துகிறது. ஆக்ஸான் கிளை செல், உடலிலிருந்து கிளர்த்தலைக் கடத்துகிறது.

டென் ரைட்டுகள் பொதுவாகக் கிளைவிட்டும் குட்டையாகவும் இருக்கும். நியூரைட்டுகள் நீளமாக இருக்கும்.

இரண்டு நியூரோன்களுக்கு இடையில் உள்ள பரிமாற்றம் செய்கின்ற பகுதியான சைனாப்ஸ் மூலம் நரம்பு உந்தல்கள், ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லுக்குச் செல்கின்றன.

நரம் புத் திசுவின் நியூரோகிளையா என்னும் பகுதி, உயிர்ப்பு மற்றும் தற்காப்புப் பணிக்கு உதவுகின்றது.

மண்டலம் ஒன்பது

நமது உடலில் உள்ள அடிப்படை ஆதாரத்தாயாக விளங்குவது செல்கள் (Cells), செல்கள் பலவாகச் சேர்ந்து