பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

3. கீழ் முதுகுப் பகுதி (Lumber) 5 எலும்புகள்.

4. திரிக பகுதி (Secral) 5 எலும்புகள்

5. வால் பகுதி (Coccyx) 4 அல்லது 5 எலும்புகள்.

குறிப்பு: வயது வந்தவர்களுக்கு, திரிக எலும்புகளும் வால் எலும்புகளும் ஒன்றாக இணைந்து, திரிகவால் எலும்புப் பகுதிகளாக (Sacrum) மாறி விடுகின்றன.

கழுத்தில் உள்ள முதல் எலும்பானது தனி அமைப்பைப் பெற்று, தலைப்பகுதியைத் (மண்டையை) தாங்கி நிற்கிறது. இதை அட்லஸ் (Atlas) என்று அழைப்பார்கள்.

கழுத்தில் உள்ள இரண்டாவது எலும்பு இருக எலும்பு, ஆக்ஸிஸ் (Axis) என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு முள்கெலும்பிலும், ஒரு உடலும் ஒரு வளைவும் (Arch) உண்டு. முள்ளெலும் பின் உடலுக்கும் வளைவுக்கும் இடையில் உள்ள பகுதியை முள்ளெலும்புத் துவாரம் என்பார்கள்.

இவ்வாறுள்ளமுள்ளெலும்புத்துவாரங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, தண்டுவடக் கால்வாயாக இருக்கிறது, அதன் உள்ளே தான் தண்டுவடம் இருக்கிறது.

முள்ளெலும்பின் உடல்கள் எல்லாம், குருத்தெலும்பு களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த முதுகெலும் புச் சங்கிலி இணைப்பானது, ஒரு முதுகெலும்பின் உடல்மேல், மற்றொரு முதுகெலும்பு இருப்பது போன்ற அமைப்பிலே இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு எலும் பு உடம்புகளுக்கும் மத்தியிலே, குருத்தெலும் பால் ஆக்கப் பட்ட ஒரு தகடு (Disc) உள்ளது.

--a

இத்தகடுகள்தான், முதுகெலும் பு அசைகிறபோது, ஏற்படுகிற அதிர்ச்சிகளைத் தாங்கி, இதமாக செயல்பட