பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

போல, தலை முன்புறமாகத் தள்ளப் பட்டு வயிறு

முன்புறமாக மடிந்தும் அமைந்திருப்பது. இதைக் குவிந்த தோள்கள் (Round Shoulder) அமைப்பு என்றும் கூறுவர்.

00

நிமிர்ந்து நிற்க, நிமிர்ந்து அமர, நிமிர்ந்து நடக்கத் தெரியாத அறியாமையினாலும், பலமில்லாத உடல்தசைகள், உடற் பயிற்சி செய்யாத காரணத்தாலும், உடல் உழைப்பை எப்பொழுதும் உதாசீனப் படுத்துவதாலும்.

உடல் திடீரென வளர்ச்சியடைந்து விடுவதும், அதனால் எலும்புகள், தசைகள் பக்குவமான வளர்ச்சி பெறாமல் போய்

விடுகிறதாலும்;

எலும்புருக்கி நோய்கள் மற்றும் பலமற்றதாக்கும் வலு போக்கும் எலும்பு நோய்கள் காரணமாகவும், முன்வளைவு ஏற்படுகின்றது.

(ஆ) பின்புற வளைவு: இதை லார்டோசிஸ் என்பார்கள், வயிறு முன்புறமாகத் தள்ளியிருப்பதால், அதை சரிகட்ட முதுகு பின்புறமாகப் போக, அதுவே பின் வளைவாகி விடுகிறது. உடல் புவிஈர்ப்புத்தானத்தைத் தள்ளிக் கொள்கிறது. அதனால் முழங்கால் பகுதியும் வளைந்து கொள்ள, உடல் விகாரமாகிப் போகிறது.

இதற்கான காரணங்கள்: உடல் தோரணை பற்றிய அறியாமை, தசைகளின் பலமின்மை, நோய்களும் ஆகும்.

(இ) பக்க வாட்டில் வளைவு: இதை ஸ்கோலியோசிஸ் என்பார்கள். நேராக இருக்க வேண்டிய தோள்களில், ஒன்று கீழிறங்கியும் மற்றொன்று மேலேறியும், ஒருபக்கம் இடுப்பு உயர்ந்தும், பக்கவாட்டில் தொங்குகிற கைகள் அழகின்றி ஏறி இறங்கித் தோன்றுகிற அவலக் காட்சியாகும்.