பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

6rs6ir

எல்லோருக்கும் தோரணை என்பது இன்றியமையாத ஒன்றாகும். காண்போரைக் கவர்ந்திழுக்கின்ற தோற்றத்தைத் தருகின்ற நன்றாகும்.

குழந்தைப் பருவம் முதலே தோரணையை விடாமல்

கடைப்பிடித்து வந்தால், முதுமையிலும் இது இதமான பலன் களையும், பயன்களையும் நல்கும். நலம் பெறச் செய்யும்.

நல்ல தோரணை என்பது, செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக, ஒழுங்காக வரிசையாக, செம்மையாக அடுக்கி வைத்திருப்பது போன்ற அமைப்பு. அந்த அமைப்பில், சரிவு இருக்காது வளைவு இருக்காது. உறுதியே இருக்கும்.

சரியாக அடுக்கப்படாத செங்கற்களின் அடுக்கில் வளைவு இருப்பதுடன், விழுவது என்பது தவிர்க்க முடியாத தாகி விடும். -

என்றும் நன்மை: நேராக நிமிர்ந்து நின்றால், நன்மைகள் நிறையவே உண்டு. உடல் உறுப்புக்கள், நிமிர்ந்த நிலையில் இருக்கும்போது, அதனதன் இடத்திலேயே இருக்கவும், அருமையாக உழைக்கவும் கூடிய வாய்ப்பும் வசதியும் வளமாகக் கிடைக்கின்றது.

தொய்ந்தும், துவண்டும், வளைந்தும் நெளிந்தும் நிற்கின்ற உடலுக்குள் உள்ள உறுப்புக்கள் இடம் மாறிப்போகவும், தரம் மாறிப் போகவும், தகுதியற்ற உழைப்பும், மிகுதியான களைப்பும் கொண்டு இயங்குவதாக மாறிப்போய் விடுகின்றது.

ஆகவே, நோயின்றி வாழ, வளத்துடனும் பலத்துடனும் வாழ, தோரணை துணை செய்கிறது. - .