பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 47

பதவியும் பொருள் வரவும்: நல்ல தோரணை உள்ள வர்களுக்கு எங்கும் வரவேற்பு உண்டு. பதவிகள் பெறவும், உயரவும் வாய்ப்புண்டு. அதனால் பொருளாதாரத்தில் மேம்பட வழிகள் உண்டு. உழைக்கும் உடலும், அதை நினைக்கும் மனமும், எழுச்சியான செயல்களும், நல்ல பதவியையும் செல்வ வளத்தையும் சேகரித்துத் தருகின்ற சிறப்பை, தோரணை தருகின்றது.

சமுதாயத்தில் அந்தஸ்து: நிமிர்ந்த தோரணை உள்ளவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு மேம்பட்ட இடம் உண்டு. அவர்களது ஆற்றல், திறமை, நுண்ணிய அறிவுத் திறன், நன்மையான செயல்கள் இவற்றால் பிறர் போற்றி வணங்குகின்ற பெருமையான வாழ்வை வழங்குகிறது.

நல்ல உடல் நல்ல மனம்: நல்ல தோரணை உள்ளவர்கள் என்றால், அது நல்ல உடலால் தான் முடியும். நல்ல உடலில் தான் நல்ல மனம் வாழ்கிறது என்பார்கள். நல்ல மனம் என்பது செம்மாந்த தோற்றத்துடன், தானே சிந்து பாடுகிறது.

இயற்கைக் காட்சிகளை, எடுப்பான செய்திகளை ாசிப்பதற்குத் தோரணையே உதவுகிறது. தொந்தி வயிறும், தொய்ந்த தேகமும், வளைந்த அமைப்பும் உடைய மக்களால், ஒரு சூரிய உதயத்தைக் கூட கண்டுகளிக்க இயலாத அவல நிலையை உண்டாக்கி விடும். -

சீர்கெட்ட தோரணையின் விளைவுகள் என்ன ஆகும்;

உடலில் உள்ளே இருக்கிற முக்கியமான உறுப்புக்கள் யாவும் முடங்கிப்போகும். செயல் திறன்களைக் குறைத்துக் கொள்ளும்; நாளாக நாளாக நலிந்து போகும்.

கூடான மார்புடன், வளைந்து நிற்கின்ற மக்களுக்குரிய இதயம் அமுக்கப்படுகிறது. நுரையீரல் நசுக்கப்படுகிறது.