பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 49

Lomi ar@jibly (Sternum) விலா எலும்புகள் (RIBS) எலும்புகளின் இணைப்புகள்(Joints)

இம்மூன்றும் சேர்ந்துதான்மார்புக் கூடு என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

மார்பு எலும்பு: ஸ்டெர்னம் என்று அழைக்கப்படுகிற மார்பு எலும் பானது, மார்புக் கூட்டின் முன் மத்தியில் அமைந்துள்ள தட்டை எலும்பாகும்.

இது மூன்று பிரிவாக அமைந்துள்ளது:

1. மெனுபிரியம் என்ற மேல் பகுதி.

2. உடல் என்ற நடுப்பகுதி.

3.சைபாய்டு துருத்தி என்ற கீழ்ப்பகுதி.

ஸ்டெர்னத்தின் மேல் விளிம்பில், ஜூகுலர் குழிவு என்ற ஒன்று உள்ளது. அதன் ஒரங்களில் காரை எலும்புகளும், 7 ஜோடி விலா எலும்புகளும் இணைவதற்கு வசதியாகக் குழிவுகள் இருக்கின்றன.

விலா எலும்புகள்

விலா எலும்புகள் நீண்டும், தட்டையாகவும், வளைந்தும் இருக்கின்ற வடிவம் கொண்டவையாக விளங்குகின்றன. மொத்தம் 12 ஜோடி (24) விலா எலும்புகள் உள்ளன. அதாவது மார்பெலும்பின் ஒவ்வொரு பக்கத்திலும் 12 எனப் பிரிந்து நிற்கின்றன.

விலா எலும்புகள் சாய்வாக அமைந்திருப்பதுடன், முன்முனைகள், பின் முனைகளை விடத் தாழ்ந்தும் இருக்கின்றன. இனி இதன் அமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.