பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தசைமண்டலம் தசையும் சிறப்பும்

அசைவும் இயக்கமும் உடைவதற்கே உடல் என்று

பெயர். இந்த அருமையான அசைவுக்கும், இதமான இயக்கத்திற்கும் ஆதாரமாக, நல்ல அடிப்படைத் தளமாக அமைந்திருப்பவை தசைகள் தாம்.

உங்களுக்கு நன்றாகத் தெரியும், செல்கள்தாம் தேகத்தின் நுண்ணிய அமைப்பு என்று.

செல்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து திசுக்கள் (Tissues) ஆகின்றன. இப்படி அமையப் பெற்ற திசுக்கள் கூட்டமே தசையாக மாறுகின்றன.

இவ்வாறு மாற்றம் பெற்ற தசைகள், தசைநார்கள், குருத் தெலும்புகள் போன்றவற்றுடன் எலும்புகள் நெம்புகோல் (Lever) போன்று செயல்பட அதே சமயத்தில் நரம்பு மண்டலமும் உச்சக்கட்டத்தில் உதவிட உடல், இயக்கம் கொள்கிறது.

இந்த உடல் இயக்கத்தை மந்திர இயக்கம் என்று வியந்து கூறுவாரும் உண்டு. இப்படிப்பட்ட இயக்கமே நம்மை நடக்கச் செய்கிறது, ஒடச் செய்கிறது, அரிய பல காரியங்களையும் செய்யவைக்கிறது.

நமது உடலில் உள்ள தசைகளே நமது தலையைத் திருப்பச் செய்கிறது. கீழே கிடக்கும் ஒரு பொருளை உதைக்க உதவுகிறது. எதிரே இருக்கும் கனமான எடை ஒன்றைத் துக்கத் துணைபுரிகிறது.

இத்தகைய தசைகள் எல்லாம் எலும்புகளுடன் இணைந்தே இருக்கின்றன. பல மூட்டுகளுடன் பலமாகப் பின்னிக்கிடக்கின்றன. குறிப்பிட்ட திசைகளில் உடல்