பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இத்தகைய தசைகள் எலும் புடன் சேர்ந்து கொண்டு இருப்பதால், இதற்கு எலும்புத் தசைகள் (Skeletal Muscles) என்றொரு பெயரும் உண்டு. -

இத்தசைகளில் வரிவரியான அமைப்பு இருப்பதால், இவற்றை வரித்தசை (Striated Muscles) என்றும் கூறுவர்.

தலை, நடு உடல், கைகால்கள் போன்றவற்றின் எல்லாத் தசைகளும் இயக்குத் தசைகளுக்குள் அடங்கும். -

ஒவ்வொரு தசையிலும் ஒர் உட்கருவும், அதனைச் சுற்றி சார்கோலிமா என்ற மெல்லிய உறையும், அநேக வரியமைப் பும் உண்டு. -

ஒர் இயக்குத் தசையானது ஏராளமான தசை இழை. களால் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தசைகளுக்கு மியோபைபிரில்ஸ் (Myofibrils) என்று பெயர்.

நமது இஷடம் போல தசைகள் இயக்கப்படுவதால் தான், ஒரு பந்தை உதைக்க முடிகிறது. நினைத்த இடத்திற்குப் பந்தை வீச முடிகிறது. வேகமாக வரும் பந்தை அடிக்க முடிகிறது.

இதன் இயக்கம் எப்படி அமைகிறது என்றால், மூளையானது தசைகளுக்கு செய்தியை அனுப்பி வைக்க, அதனால் உடல் செயல் நம் விருப்பம் போல் நடைபெற்று விடுகின்றது. 2. இயங்கு தசைகள்

இப்படிப்பட்ட தசைகள், நம் விருப்பம் போல் இயங்காது, அவை தாமாகவே, தன்னிச்சையாகவே செயல்படுகின்றன.

அதாவது, நாம் நினைக்காத நேரத்திலும், தாமாகவே தொடர்ந்து தனது தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றன.