பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் - 73

அதிக உழைப்பின் காரணமாக (Over exertion) சுளுக்கு ஏற்படலாம். சில சமயங்களில் நரம்புச் சக்தியை (nerve energy) அதிகமாக வீணடித்து விடுகிற போதும், சுளுக்கு ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு.

தசைச் சுளுக்குப் பொதுவாக, கெண்டைக் கால்களில் தாம் ஏற்படும். சாப்பாட்டு உப்பு அல்லது கால்சியம் மாத்திரைகள் சாப்பிட்டால், உடனே குணம் தெரியும்.

4. saper qhr (Muscle Soreness)

அதிக உழைப்பின் காரணமாக, தசைத் திசுக்கள் சேதமடைந்து, தேய்ந்து, புண்ணாகிப் போவதால்தான், இந்த நிலை எற்படுகிறது. ஒய்வுதான் இதற்கு முதன்மையான மருந்து. உள்ளே உள்ள புண் ஆறுவதற்கான வாய்ப்புக்களை ஒய்வு, மருந்து போன்றவற்றை உபயோகப் படுத்தி, சுகப்படுத்திக் கொள்ள வேண்டும். -

இனி, உடற்பயிற்சியால் தசைகள் பெறும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம். -- i.

தசைகளும் உடற்பயிற்சிகளும்

தசை மண்டலம் முழுவதும் தக்க உடற்பயிற்சிகளால் பக்குவமான பயன்களைப் பெறுகின்றது.

விசை மிகுந்த இந்த மண்டலமே தசை மண்டலம் என்று பிறப்புடன் பேசப்படுகிறது.

விசையிழந்த தசைகள், சதைப் பிண்டம் என்று பலரால் பரிகசிக்கப்படுகிறது. அந்தப் பாழ்நிலையை அகற்றி, பலம்

நிறைந்த நிலையில் தசைகளைப் பணிபுரிய வைப்பதில், உடற்பயிற்சிக்கு நேர் வேறெதுவுமே இல்லை.

அப்படிப்பட்ட பயிற்சிகளினால், தசை மண்டலத்தில் ஏற்படுகிற பயன்களைப் பார்ப்போம்.