பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

1. தசைகள் நன்றாகச் சுருங்கி, விரிவடைகின்ற காரணத்தால், தசைகளின் செயல்திறன், ஆற்றல் அதிகரிக் கின்றது. * + -

2. தசைகள் நன்றாக இயக்கப்படுவதால், அவற்றுள் இரத்த ஒட்டம் அதிகமாகச் செல்கிறது. இரத்தத்தில் கலந்துள்ள உயிர்க் காற்றும், உணவுப் பொருட்களும் தசைகளுக்கு மிகுதியாக வந்து சேர்கின்றன. தேவைக்கேற்ற சத்துப் பொருட்கள் தசைகளுக்குக் கிடைப்பதால், அவற்றின் வடிவும், வனப்பும், பலமும் நலமும் பெருக்கம் கொள்கின்றன. -

3. இயங்குகின்ற தசைகளில் எப்பொழுதும் இணைப்புப் பெற்றுள்ள நரம்புகள், நல்ல வலிமையைப் பெறுகின்றன. இதனால் நரம்பு மண்டலம் வலிமை பெறுகிறது. தசை மண்டலமும் நல்ல தூண்டல்களைப் பெற்று, செழித்தோங் கிடும்; பணியாற்றுகிற செப்பத்தையும், திட்பத்தையும், நுட்பத்தையும் பெறுகின்றது.

4 உடற்பயிற்சி தசைகளுக்கு நலத்தையும் பலத்தையும் மட்டும் நல்காமல், மற்ற மண்டல (system) உறுப்புக்களிலும் மறுமலர்ச்சி மிக்க மாற்றங்களை உண்டு பண்ணுகின்ற்து. உதாரணமாக, இதயத் துடிப்பு, இரத்த இறைப்பு, சுவாசத்தில் அதிக இழுப்பு-இப்படியாக செழுமையாக மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றது.

5. உடற்பயிற்சியால் இதயத் தசை வலிமை பெறுவதால், குறைந்த உழைப்பில், நிறைந்த இரத்தத்தை உடல் முழுதும் இறைத்து, சீரான இரத்த ஓட்டத்தைக் கொடுக்க உதவுகிறது.

இதயம் ஒரு முறை சுருங்கி விரிகிற இயக்கத்தை விளக்கவருகிற ஆய்வறிஞர் ஒருவர், இரண்டு பவுண்டு