பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இரத்தப் போக்கு விரைவாகவும் அதிகமாகவும் போய் விட்டால், அதிர்ச்சி (Shock) ஏற்படும், அத்துடன் இதயத்திற்குச் செல்கிற இரத்தத்தின் சீரழுத்தம் பாதிக்கப் படுவதுடன், இரத்த அழுத்தத்திலும் தாழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எல்லா உடல் உறுப்புக் களும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாலும், மூளை பாகம் சரிவர செயல்படாமற் போய்விடுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், கடுமையான அபாயம் ஏற்படுகிறது. அல்லது நீங்காத நோயும் நேர்ந்துவிடுகிறது.

அந்த அபாய நிலை வராமல் அகற்றவும், காத்துக் கொள்ளவும் இரத்தம் உறைதல் என்கிற ஏற்பாட்டினை தேகம் செய்து கொள்கிறது.

அது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

இரத்தம் உறைந்து கொண்டு, வெளியேறாமல் தடுப்பதற்கு உள்ளுக்குள்ளே பல இரசாயன மாற்றங்கள் தேவைப்படுகின்றன. -

உடம்பில் ஒரிடத்தில் காயம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த இடத்தில் இரத்தக் குழாயானது சேதமடைந்து விடுகிறது. அங்கே உள்ள இரத்தத் தட்டுகளும் சிதறி, சிதைந்து போகின்றன. அப்பொழுது, அங்கே உண்டாகும் புதிய மாறுதல்களினால், விஷேஷமான இரசாயனப் பொருள் ஒன்று விளைவிக்கப்படுகிறது. அதற்கு

திராம்போகைனேஸ் என்று பெயர்.

பிளாஸ்மாவில் உள்ள கால்சியகத்தின் உதவியோடு, பிளாஸ்மா உள்ளேயே அடங்கிக் கிடக்கும் புரோத்ரோம்பின் (Prothrombin) எனும் பொருளை இரசாயன மாற்றமடையச் செய்து, த்ரோம்பின் என்ற பொருளாக மாற்றி விடுகிறது.