பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 87

இந்தத் த்ரோம் பின், பிளாஸ்மாவில் இருக்கும் ஃபைபிரினோஜனை (Fibrinogen) நூல் போன்ற ஃபைபிரினாக (Fibrin) மாற்றி விடுவதால்தான், அங்கே இரத்தம் ஓடாமல் உறைந்து கொள்கிறது.

புரோத்ரோம்பின் என்னும் சத்தானது, கல்லீரலுக்குப் போதிய அளவு K வைட்டமின் கிடைக்கின்ற சமயத்தில், கல்லீரலால் பெரிதும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இரத்தம் உறைவதற்கு இப்படியாக ஏற்படுகின்ற் முறைக்கு, 12க்கும் மேற்பட்ட காரண காரியங்கள் நடை பெறுகின்றன என்பது, ஒரு சிறப்புக் குறிப்பாகும்.

கால்சியம் + பிரோத் ரோம் பின் + த்ரோம் பின் + பைபிரினோஜன் - பைபிரின்.

உறைதல் விதங்கள்

பைபிரின் நூல் கற்றைகள், இரத்தச் செல்களைச் சுற்றி, வலை போன்று பின்னி விடுவதால், ஏற்படுகின்ற இறுக்கத்தாலும், சுருக்கத்தாலும், மஞ்சள் நிறமான ஒரு திரவத்தை உண்டு பண்ணிவிடுகிறது. அதைக் சீரம் (serum) என்பார்கள். அதுவே இரத்த உறைதலை ஏற்படுத்தி விடுகிறது. -

இன்னொரு முறையிலும் இரத்த உறைதல் ஏற்படுத்தப் படுகிறது. -

இன்னொரு முறையில் இரத்த உறைதல் ஏற்படுகிற விதம், இரத்தத் தட்டுகள் ஒரு புதிய ஹார்மோனை அந்தச் சமயத்தில் உற்பத்தி செய்கிறது. அதற்கு சீரோடோனின்(Sero Tonin) என்று பெயர். இந்த சீரோடோனின், இரத்தக் குழாய்களைத் தூண்டிவிட்டு, சுருங்கச் செய்து, அதன் மூலம் இரத்தம் வெளியேறுவதைத் தடுத்துவிடுகிறது.