பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இரத்தம் உறையாவிட்டால்?

ஸ்கர்வி, குறிப்பிட்ட ஒரு வகைக் காய்ச்சல், பிளேக் வியாதி போன்ற நோய்களால் தேகம் பாதிக்கப்படுகிற போது, அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படும். இரத்தம் உற்ைதல் ஏற்படாத அவல நிலையும் உண்டாகும்.

காரணம் என்னவென்றால், நோய்கள் எலும்புகளைப் பாதித்து, அங்கே இருக்கிற எலும்புச் சோற்றைப் பாதித்து, இரத்தத்தட்டுகள் உற்பத்தியாக விடாமல் செய்துவிடுகின்றன.

சில சமயங்களில், இரத்தத் தட்டுகள் காரணமின்றி உற்பத்திக் குறைந்து போய் விடுவதும் உண்டு.

வைட்டமின் K சக்திதான் இரத்தம் உறைதலுக்கான பற்பல சூழ்நிலைகளை உருவாக்கி, 12க்கும் மேற்பட்ட உதவிப் பொருட்களை உற்பத்தி செய்து உதவுகிறது. ஆகவே K வைட்டமின் என்பது மிகவும் முக்கியமான சக்தியாகும்.

விரைவாக இரத்தம் உறைதலை உண்டாக்குவதற்காக குளிர் அடையச் செய்தல், கரடுமுரடான பொருட்களுடன் உராயும் படி செய்தல் போன்ற முறைகளை நாம் கையாளலாம். *

இதயமும் இரத்த ஓட்டமும் இதயத்தின் வடிவமைப்பு (structure)

குழிவும் கூம்பு வடிவம் கொண்டதாகவும், தசைகளால் ஆனதாகவும் இதயம் அமைந்திருக்கிறது. இது ஒரு மனிதனின் மூடிய கையளவு அல்லது முஷடி அளவுதான் இருக்கும். அதன் எடை 300 கிராம். மார்புக்கூட்டின் இடது பக்கமாகவே, இதயத்தின் பெரும்பாகம் இடம் பெற்றுள்ளது.