பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

1. வலது ஏட்ரியத்திற்கும் வலது வென்டிரிக்களுக்கும் இடையே உள்ளது மூவிதழ் வால்வு (Tricuspid Valve)

2. இடது பக்கத்தில் உள்ள ஏட்ரியத்திற்கும் வென்டிரிக் களுக்கும் இடையே உள்ளது ஈரிதழ் வால்வு (Bicuspid Valve)

3. நுரையீரல் தமணி, மற்றும் மகாதமணி துவங்குகிற துவாரங்களில் காணப்படுவன அர்த்த சந்திர வால்வுகள் (Semilunar valve)

வால்வும் பயனும் -

மூவிதழ், ஈரிதழ் வால்வுகள், வென்டிரிக்களிலிருந்து இரத்தம் மீண்டும் ஏட்ரியங்களுக்குச் செல்லாதவாறு தடுக்கின்றன. - -

நுரையீரல் தமணியிலிருந்தும், மகாதமனியிலிருந்தும் இரத்தம் அதனதன் வென்டிரிக்கிள்களுக்குச் செல்லாதவாறு அர்த்த சந்திர வால்வுகள் தடுக்கின்றன. -

இதயத்தின் பணி

/. இதயத்தின் இயக்கம் -

இதயம் சுருங்குவதற்கு சிஸ் டோலி என்றும்; விரிவடைவதற்கு டயஸ்டோலி என்றும் பெயர்.

இதயம் மூன்று நிலையில் இயங்குகிறது.

(அ) இரு ஏட்ரியங்களும் சுருங்கும்போது, ஏட்ரியங்

களிலிருந்து இரத்தம் வென்டிரிகிள்களுக்குள் செல்கிறது. இது முதல் நிலை. -

(ஆ) இரத்தம் பெற்ற இரு வென்டிரிக்கிள்களும் ஒரே சமயத்தில் சுருங்கி, மகாதமணிக்குள்ளும், நுரையீரல் தமணிக் குள்ளும் இரத்தத்தை தள்ளுவது இரண்டாம் நிலை.