பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி - 83 நாயகர் பெருமான் மூன்றாவது வினாவைத் தொடுத்தபோது, 'கடவுள் பெரிதா? மாயை பெரிதா?’ என்றார் - சிறிது நாட்டமுடன் அதற்கும், விவேகானந்தர் அவர்களால் தக்க விடையளிக்க இயலாது போயிற்று. ஆனால், அந்த மூன்று வினாக்களுக்கும் அவரையே விடையளிக்குமாறு விவேகானந்தர் எழுந்து கேட்டுக் கொண்டார்: சைவ சித்தாந்த சண்டமாருதப் பெருமான் சோமசுந்தரநாயகர் அவர்கள், தமிழ் நாட்டின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, தக்கவாறு விடைகளை விளக்கி அமர்ந்தார்: இந்த வேதாந்த - சித்தாந்தப் போர் வாதாட்டப் பரிசு என்ன தெரியுமா? வெற்றி பெறுபவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களா னாலும், அந்த அவையிலே பொன்னாடை ஒன்று போர்த்திப் பாராட்டப் படுவார்கள்! ஞாலம் போற்றும் ஞானப் பரிசுகள்! அவை நடுவே, ஐயாயிரம் ரூபாயுள்ள பொற்கிழி ஒன்று தொங்க விடப்பட்டிருந்தது! அவரவர் சித்தாந்தத் தின் பெயரால் சண்ட மாருதம் என்ற விருதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற ஞானிகளின் இருகைகளிலும், சுண்டு விரல் பருமனில் வளையமாக, பூ வேலைப்பாடுகளுடன், இரு முனைகளும் ஒன்று சேரும் முகப்புகளில் மணிகள் சில அழுத்தப்பட்டுக் கழுத்து வரையிலுள்ள சற்றுப் பெரிதான தலைகளுடன் கூடிய, இரண்டு சிங்கமுகயாளிகள் ஒன்றை ஒன்று தொடுவதாகத் தோன்றுமாறுதங்கத்தால் செய்யப்பட்டதோடாக்கள் பூட்டப்படும். அந்தச் சிங்கமுகத் தலைகள் மேலே மணிமுடி ஒன்று தாங்குவது போல் இருக்கும் எல்லாம் தங்கத்தாலானவையே! இந்தப் பரிசை மன்னர் சேதுபதி நாயகர் பெருமான் கைகளிலே பூட்டி, பொன்னாடையைப் போர்த்தி, பொற்கிழியும் வழங்கி, சைவ சித்தாந்த சண்ட மாருதம் சோம சுந்தர நாயகர் என்று அழைத்துப் பாராட்டினார்: ஒரே கையொலி மயமானது அவை! விழாவின் இறுதியிலேபேசிய விவேகானந்தர் “நாயகர்பேசிய சித்தாந்த நெறிகளை இதுவரை நாம் அறிந்ததில்லை. காரணம், வடநாட்டில் இந்தச் சித்தாந்த விவரங்களை பற்றி ஏதுமில்லை!" சிவ சித்தாந்தத்தின் உண்மைகள் அறிவியலுக்கும் பகுத்தறிவிற்கும் பொருத்தமாக அமைந்துள்ளன. இவற்றை நான்