பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. தேசியத் தலைவர் காமராஜர் முன்பே அறிந்திருந்தால், அமெரிக்காவிலே சிவநெறியினை எடுத்துக் கூறியிருப்பேன். இனி அமெரிக்கா சென்றால் சிவ சித்தாந்தாத்தையே பரப்புவேன்! அதை ஆங்கிலத்திலே தாருங்கள். ' என்றார்: சிவஞான போதத்தை விவேகானந்தர் ஏற்றார்: ஆந்திர மாநிலத்திலே சித்துர் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்த ஜே.எம். நல்லசாமிப் பிள்ளையவர்கள், சிவஞான போத நூலை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்து அனுப்பினார். நாயகர் வினாக்களுக்கு விவேகானந்தர் விடையளிக்க இயலாமல் திகைத்ததற்குக் காரணம், அவர் அறிவினுடைய ஆற்றலின் மாட்சிக் குறைவல்ல! அடிகள் பயின்றது இந்திய நாட்டில் பெருவழக்காகி உள்ள அத்வைத சித்ததாந்தமே அதனை அருளியவர் ஆதி சங்கரர். கேவலாத்துவிதம் சித்தாந்தம் என்றால், கேவலம் = சிறந்த அத்துவிதம் = இரண்டில்லாதது; அதாவது ஒன்று என்று பொருள்! கடவுள் உலகத் தோடும், உயிர்களோடும் இரண்டாக இல்லாமல் ஒன்றாக ஒன்றியிருப்பது என்பதே. இந்த சித்தாந்தத்தின்படி, உயிர்களும் உலகமும் இல்லை அல்லவா! பொருள் ஒன்றே, அது ஆன்மா அல்லது கடவுள். ஆன்மா ஒன்றே உண்டு! உலகமும் உயிர்களும் வெறுந்தோற்றங்களே! வெவ்வேறு ஆன்மாக்கள் உண்டு என்று பேசுவது அறியாமை! மெய்யறிவினால் ஆராய்ந்து பார்த்தால் அவை பொய்த் தோற்றங்கள் உண்மையில் உயிர்களும் - உலகமுமில்லை! தமிழ்நாட்டில் தவிர, பாரத நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சங்கரருடைய இந்தக் கேவலாத்துவைதமே பரவியுள்ளது. அங்குள்ளோர் அனைவரும் அந்தச் சித்தாந்தத்தை தவிர, தமிழகத்தின் சைவ சித்தாந்தத்தை அறியப் பெரும்பாலும் வழியில்லை. நாயகர், சைவம், வைணவம், சமணம், கிறித்தவம், பெளத்தம், இஸ்லாமியம், வேதாந்தம், சித்தாந்தம் அனைத்தும் அறிந்த ஞான மேதை! அறிவுப் புரட்சியைத் தமிழகத்திலே எழுப்பி, சிறந்த அறிவுணர்வுகளை உலகுக்கு உணர்த்திய ஞான சூரியனான சோம சுந்தரநாயகர் அவர்கள் 1901-ஆம் ஆண்டு இறுதியிலே மறைந்தார்: