பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 85 அமெரிக்கா சென்று இந்திய இறையியலையும் - அதன் சிறப்புக்களையும் அவனிக்கெலாம் பரப்பி ஞான அறிவுப் புரட்சி செய்தவர் விவேகானந்தர். அந்த ஞானநாவலர் தமிழ்நாட்டின் சித்தாந்தத் தந்தையான நாயகர் பிரானிடம் வாதப்போராடி சிவ சித்தாந்தமே சிறந்தது எனச் சான்று கூறி அறிவுப் புரட்சியும், கல்விப் புரட்சியும் செய்தார். அவர் 1902-ஆம் ஆண்ட மறைந்தார்! உலக மதங்களின் ஞானச் சாற்றைப் பருகிய விவேகானந்தர் என்ற ஞானப்பறவை, சைவ சித்தாந்தமெனும் போதிமரத்தடியிலே ஞானம் பெற்றிட, எல்லா ஞானசிரம ஏற்பாடுகளையும் செய்து தந்து, அறிவுப் புரட்சியை, அறிவு வளர்ச்சியை, கல்விப் புதுமையைத் தோற்றுவித்த மன்னர் சேதுபதியின் தமிழ்த் தொண்டு, நாட்டுப்பற்று, தமிழபிமானம், மனிதநேய மாண்பு அவர் இறந்த 1903-ஆம் ஆண்டுடன் மறைந்தது ஞானச் சாரலில் ஞானப் பிறப்பு! இந்த மூன்று ஞான மகான்களின் கல்வி உணர்ச்சிகளின் வித்துக்களாக, அறிவுப் புரட்சியின் மறுமலர்ச்சியாக 1901, 1902, 1903-ஆம் ஆண்டுகள், கல்விப் புரட்சியில் சிறந்து அறிவுக் கொடியை அகிலத்துள் பறக்க வைத்துக் கொண்டிருந்த ஆண்டுகளாகத் திகழ்ந்தன! இந்த மூன்றாண்டுகளின் ஞானச்சூழல் பின்னணியில்தான் காமராஜர் என்ற குழந்தை தமிழ் மண்ணில் தோன்றியது. ASAS SSAS SSAS SSAS AeeeS గ్గ ఫ్లో ఫ్లో :- ה" 。ー - ז"