பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(15.) பார 龜鱷 இன்றைய விருதுநகர் என்ற நகரம், அன்று விருதுபட்டி என்ற பேரூராக விளங்கியது. விருதுபட்டி சிவஞான யோகிகள் என்ற பெரும் புலவர்.அங்கு வாழ்ந்தார். பிறகு அவர்கோவில்பட்டியிலே சென்று தங்கினார். யார் பாடலைப் பாடி ளேந்தும்போராட்டம்! அவர்தான் தந்தை பெரியாருக்கு முன்பாகவே 1900-ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழகம், பக்திவிளை கழகம் என்ற இரு கழகங்களை நடத்தியவர்; வடமொழி உபநிடதம் ஒன்றை அகவற்பாவில் மொழி பெயர்த்தவர்; தமிழ் - தனி முதல்மொழி என்று உலகுக்கு நிலை நாட்டியவர் இந்த விருதுபட்டி வித்தகரான சிவஞான யோகிகள்: இத்தகைய விருதுபட்டியிலே உள்ள சுலோசன நாடார் தெருவில், நாட்டாண்மைக்காரராக இருந்த சுலோசன நாடார் வீடு இருந்தது. அந்த மூன்றாண்டுகளின் முனைப்புக்கானச் சூழ்நிலையின் ஞானச் சாரல்கள் சாயல்களிலே முகிழ்த்ததுதான் காமராஜ் என்ற ஞானக்குழந்தை அந்தக் காமராஜ் என்ற சிசு, பிற்காலத்தில் தமிழ் நாட்டுக் கல்வியின் கற்பகத் தருவாக விளங்கப் போவது அதற்குத் தெரியுமா என்ன? இருந்தாலும், காமராஜ் பிறந்த காலத்தின் கோலம்: தமிழகத்திலே மட்டுமல்ல, அகில உலகுக்கும் ஒர் அறிவுப் புரட்சியை, ஞானப்புரட்சியை கல்விப் புரட்சியை உருவாக்கிய கோலமாகத் திகழ்ந்தது! அந்தக் கோலாகலக் காலத்திலே தோன்றியவர்தலைவர் காமராஜ் என்பதை காலம் போகப்போகக் கண்ணாடியாக நின்று எதிரொலித்தபடியே இருந்ததைக் காண்போம்! அருட்பா மருட்பா போர்! காமராஜ் என்ற குழந்தை பிறந்த அதே 1903-ஆம் ஆண்டிலே தான், அருட்பிரகாசவள்ளல் பெருமானின் அருட்பா பாடல்களே