பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 87 என்ற அருட்பா - மருட்பா போரின் இரண்டாவது கட்ட அருட்புரட்சிப் போர் நடைபெற்றது! சைவசமய ஆசாரியர்களானஅப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்ற நான்கு அருட்செல்வர்கள் பாடல்கள்தாம் இறையருள் பெற்ற அருட்பாக்கள்! இராமலிங்க சுவாமிகள் பாடல்கள் அருட்பாடல்கள் அல்ல என்பது அருட்பா குழுவினரின் வழக்கு! வள்ளல் பெருமான்பாடல்கள்அருட்பாடல்கள்தாம் மருளால் பாடப்பட்ட பாடல்களல்ல என்பது மற்றைக் குழுவினரின் வாதம்: அருட்பா குழுவின் தலைவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள். எதிர் அணிக்கு வள்ளல் பெருமானே தலைவர் இது முதற்கட்டப்போர்! தமிழகம் முழுவதும் இதை ஒர் இலக்கியப் போராகவே இரு அணியினரும் நடத்தினார்கள்! வள்ளல் பெருமான் மீது நாவலர் பெருமான்கடலூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்து, வள்ளல் பெருமான் பாடல்கள் அருட்பாடல்தான் என்பதை உணர்த்தினார். நாவலர்பெருமான்.அத்துடன் தனது எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டார். அவருக்குப் பிறகு, காமராஜர் பிறந்த அதே 1903-ஆம் ஆண்டில், நா. கதிரைவேற்பிள்ளைமருட்பா அணிக்குத் தலைவரானார்! திரு.வி.க. அவர்கள் தனது ஆசான் அணிக்கு உதவியாளராக இருந்தார். அருட்பா அணிக்கு தமிழ்க்கடல் மறைமலையடிகளாரும், சதாவதானி செய் குதம்பிப் பாவலரும் இணைந்து அருட்பா போர்க்களம் கண்டார்கள்! இந்தப் போர் 1903-ஆம்ஆண்டு முழுவதும் நடைபெற்றது. இறுதியிலே அறிவுப்புரட்சியை நிலை நாட்டினார்கள்அடிகளாரும் - பாவலரும் ஆகிய அருட்பா அணியினர். அந்தக் காலகட்டத்தில்தான், தமிழக முழுவதுமுள்ள அறிஞர் அணிகளுக்கு இடையே இலக்கிய புரட்சி, அறிவுப் புரட்சி நடைபெற்ற நேரத்திலேதான், எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தில் ஏழ்மை ஒழிப்புப் புரட்சிக்கும், கல்விப் புரட்சிக்கும், ஏற்றத் தாழ்வுகளைச் சமன்படுத்தும் அறப் புரட்சிக்கும் வித்திட்டுழைக்கும் காமராஜ் என்ற குழந்தை பிறப்பெடுத்தது. காமராஜ் என்ற குழந்தை தமிழ் மண்ணிலே தவழ்ந்தபோது, தமிழ்நாட்டிலே ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சி, அடிமை எதிர்ப்புப்