பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 தேசியத் தலைவர் காமராஜர் புரட்சி, தமிழ் ஞானப் புரட்சி, இலக்கியப் புரட்சி, வேதாந்த சித்தாந்தப் புரட்சி, கல்விப் புரட்சி, சமயப் புரட்சிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமாகக் காட்சியளித்தன! காமராஜ் பிறந்தார்: அந்த வீட்டில்தான் 1903-ஆம் ஆண்ட ஜூலை மாதம் 15ஆம் நாள் காமராஜ் பிறந்தார். தந்தை பெயர் குமாரசாமி, தாயார் சிவகாமி அம்மாள். பிறந்த குழந்தைக்கு முதன் முதலாகக் காமாட்சி என்று பெயர் சூட்டினார், பாட்டி பார்வதி அம்மாள். காமாட்சி என்று அவருக்குப் பெயரிட்டிருந்தாலும், அவரை எல்லோரும் 'ராஜா ராஜா என்றே அன்போடு அழைப்பது வழக்கமாயிற்று இறைவன் பெயராலும் தன் மகன் அழைக்கப்படல் வேண்டும் என்று எண்ணிய அவரது தந்தையார், காமாட்சி ராஜா என்ற இரண்டு பெயர்களையும் இணைத்துக் காமராஜா என்று அழைத்தார்: தந்தையார் ஆசைக்கேற்றவாறு காமராஜர் என்ற பெயரே அவருக்கு இறுதிவரை நிலைத்துவிட்டது. நாளடைவில், தந்தையார் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரைக் காமராஜ் என்றே அழைத்தார்கள். அவருக்குப் பிறகு பிறந்தபெண்குழந்தைக்கு நாகம்மாள் என்று பெயர்சூட்டினார்கள். ஏனாதி சிறப்பு என்ன? அதற்கு மேலுள்ள கல்வியைக் கற்க, சிறுவன் காமராஜ் ஏனாதி நாயனார் வித்தியாசாலா என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் ஏனாதி நாயனார். சோழநாட்டைச் சேர்ந்த எயின் முதுர் என்ற ஊரைச் சேர்ந்தவர் அவர். சோழமன்னர் படைகளுக்கு வாட் பயிற்சி கற்றுக் கொடுக்கும் போர்ப்படை ஆசிரியராகப் பணிபுரிந்த போர் வீரர் ஏனாதி நாயனார். வீரத்தை இளம் வயதிலேயே கற்றுத் தரும் ஒரு வீரத் திருமகன் பெயரோடு விளங்கிய பள்ளியிலே சேர்ந்து கற்ற கல்வியினாலோ என்னவோ, குழந்தை காமராஜ், வாலிபன் காமராஜாகி அரசியலிலே அடியெடுத்து வைத்துப் புகழீட்டி வந்த போது, அவர் வாளேந்தும் போராட்டத்திற்கே தலைமை வகித்து நடந்தார்!