பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 39 வாளேந்திய போராட்டம்! காங்கிரஸ் போராட்ட வீரர்கள் வாளேந்திச் செல்வதென்றால், ஆங்கிலேயர்ஆட்சியாளரிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி பெற வேண்டும்! இது அக்காலக் காவல்துறைச்சட்டம்! எவரும் ஆறு அங்குலம் நீளத்திற்கு மேல் கத்தியை வைத்திருக்கக் கூடாது! அதை மீறி வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை தண்டணை, அதனால் ஆறு அங்குலத்திற்கு உட்பட்ட கத்தியை மட்டுமே பொதுமக்கள் வைத்திருக்கச் சட்டம் அனுமதித்தது. அந்தச் சட்டத்தை மீற வேண்டும் என்று அவாரி என்பார் வடநாட்டிலே உள்ள நாகபுரி என்ற நகரிலிருக்கும் காவல்துறையை எதிர்த்து.அதே காவல் நிலையம் முன்பு போராட்டம் ஒன்றை நடத்த ஆரம்பித்தார். அந்தப் போராட்டத்திற்கு வாள் ஏந்தும் போராட்டம் என்று பெயர். அது மதுரை மாநகரிலேயும் எதிரொலித்தது. ஐந்து நீண்ட வாட்களைக் காங்கிரஸ் கட்சிப் போராட்ட வீரர்களுக்குத் தயார் செய்து கொடுத்து, வாள் போராட்டக் கிளர்ச்சியை நடத்தினார் காமராஜ். விருதுநகரிலே இருந்த காங்கிரஸ் தொண்டர்கள், அவரவர் கைகளிலே ஏந்திய வாட்களோடும், கழுத்திலே சூட்டப்பட்ட மலர் மாலைகளுமாக, மதுரை மாநகர் முக்கிய வீதிகளிலே எல்லாம் ஊர்வலமாகப் புறப்பட்டார்கள்! அப்போது தொண்டர்களிலே சிலர், சிறைக்குச்செல்ல வேண்டிய நிலை இருக்குமோ என்று தயங்கினார்கள் காரணம், அவரவர் குடும்பச் சூழ்நிலைகள் தான். வாள் ஏந்திய ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் தயங்கி நின்ற வீரர்களைக் கண்ட காமராஜ் சிரித்தார்: எந்தெந்த போராட்டவீரர்களுக்குக் கொடுக்கவேண்டுமென்று அவர் வாட்களைக் கொண்டு வந்தாரோ அவையெல்லாம் அவருடைய கைகளிலேயே இருந்து பளபளத்தன. காமராஜ் பாடிய பாரதி பாடல்! கோழைகளாக நின்றுகொண்டிருந்த அறப்போர்வாலிபர்களைக் கண்டு, வீரம் உந்தி விளங்கிய உணர்ச்சி பொங்கியக் குரலோடு "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி" என்ற பாரதியாரின் பாடலை, வீதியெலாம் 'பாடிப்பாடி காமராஜ்