பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தேசியத் தலைவர் காமராஜர் அதிர வைத்து விட்டார் பொது மக்கள் பெருங்கூட்டமாய் அவர் பின்னே பாடிச் சென்றனர். ஆசுகவி காளமேகம் பாடிய காட்சி கவி காளமேகம் ஒர் ஆசு கவி. நினைத்த நேரத்தில் நினைத்த பொருள் பற்றி நினைத்த இடத்திலேயே பாடக் கூடிய ஆற்றல் பெற்ற கன்னற்றமிழ்க் கவிஞன். திருக்கண்ணபுரம் என்ற திருவூருக்கு ஒருநாள் வந்தார் கவிஞர். திருமால் கோவிலுக்குள் சென்று வணங்க அவர் நினைத்தார். ஆனால், அங்கே அக் கவிஞரைச் சைவ வைணவப் போராட்டக் கண்கொண்டு பார்த்தார்கள். காளமேகக் கவிஞன் வைணவ மடப் பள்ளியில் பணியாற்றியவர்; பிறகு சைவரானவர், சைவ சித்தாந்த சண்ட மாருத சோம சுந்தர நாயகரைப் போல. சோம சுந்தர நாயகருக்கு அவரது பெற்றோர்கள் அரங்கநாதன் என்று பெயரிட்டார்கள். வைணவ வேதாந்தக் கடலிலே மூழ்கி மூழ்கிக் களைத்துப் போன நாயகர், பிறகு சைவராக மாறிச் சைவ சித்தாாந்தச் சண்ட மாருதமானார். அவர் பெளத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம் மத நெறிகளை எல்லாம் நன்கு ஆய்ந்து தர்க்க வாதம் புரியும் ஆற்றலாளர்; அனைத்திலும் தேர்ச்சி பெற்ற மேதை. அந்த அரங்கநாத நாயகர்தான், பிறகு சிவதீக்கை பெற்று, சோமசுந்தர நாயகரானார் சைவ மத நெறிகளில் தக்காரும் மிக்காருமின்றிச் சண்ட மாருதமாக நடமாடினார்! அவரைப் போல், ஆசுகவி காளமேகம் அவர்களும், முதலில் வைணவ மதப் பற்றாளராக விளங்கிய பின் பிறகு, சைவ சித்தாந்தியாக மாறினார். அதனால் திருக்கண்ணபுரத்து விஷ்ணு கோயிலுக்குள் அவர் நுழைவதை எதிர்த்து சிலர் போர்க்கொடி ஏந்தினார்கள்! உடனே காளமேகம், நான் சிவனடியார்தான்! ஆனால் திருமாலையும் வணங்குவதில் என்ன தவறு? என்று கோவிலுக்குள் நுழைந்தார். கோயில் புனிதம் கெடவிடமாட்டோம் என்று மறித்து, கோயில் கதவுகளை இழுத்துச் சாத்தி விட்டார்கள் வேதியர்களான அந் திருமாலடியார்கள் மனம் நொந்து போனார் காளமேகம்! உடனே, பக்தர்கள் கூட்டத்திலிருந்த ஒர் வைணவர், ஏங்காணும் ! உங்கள் சிவபெருமான் சிரித்தால் வாயிலிருந்து